காமெடி தர்பார்.. டெல்லியில் ஆளுநர் சரியில்லை.. சர்விஸ் செய்ய எல்ஜி நிறுவனத்திற்கு அழைப்பு!
டெல்லியில் எல்ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணைநிலை கவர்னர் (லெப்டினன்ட் கவர்னர்) சரியாக வேலை செய்யவில்லை என்ற டிவிட்டிற்கு, எல்ஜி நிறுவனம் பதில் அளித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் எல்ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணைநிலை கவர்னர் (லெப்டினன்ட் கவர்னர்) சரியாக வேலை செய்யவில்லை என்ற டிவிட்டிற்கு, எல்ஜி நிறுவனம் பதில் அளித்துள்ளது.
டெல்லியில் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை கவர்னர் அணில் பைஜாலுக்கும் இடையில் பிரச்சனை முற்றியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் போராட்டம் செய்து வருகிறார்.

இதனால் அலுவலகம் செல்ல முடியாத, துணை நிலை ஆளுநர், வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சரியாக பணி செய்ய விடாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதைவைத்து டெல்லியில் நிறைய காமெடிகள் வலம் வருகிறது.
அதன்படி டெல்லியை சேர்ந்த திரைப்பட இயக்குனர் சிரிஷ் குந்தர், தனது டிவிட்டில், எல்ஜி நிறுவனத்தை டேக் செய்து ''உங்களுக்கு டெல்லியில் எல்ஜி சர்விஸ் சென்டர் இருக்கிறதா? இங்கு இருக்கும் எல்ஜி வேலை பார்க்கவில்லை, மற்றவர்களையும் வேலை பார்க்கக் விடவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் டெல்லி லெப்டினன்ட் கவர்னரை குறிப்பிட்டு எல்ஜி என்றுள்ளார்.
ஆனால் எல்ஜி நிறுவனம் அதை உண்மையான பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு, ''உங்கள் பிரச்சனைக்கு வருந்துகிறோம். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்யுங்கள், நாங்கள் உதவி செய்கிறோம்'' என்றுள்ளனர். இந்த டிவிட்டை வைத்து எல்லோரும் கிண்டல் செய்து கொண்டுள்ளனர்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications