For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” – ரேடியோவில் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி "மன் கி பாத்" என்ற தலைப்பில் ஆல் இந்தியா ரேடியோ வானொலியில் மாதம் மாதம் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வானொலி நிகழ்ச்சியில் அவர் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர், ‘'மாணவ-மாணவிகளே நீங்கள் உங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும் இந்நேரத்தில் நானும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

Live Narendra Modi Mann Ki Baat about board exams

நான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் மிகவும் சாதாரணமான மாணவனாகத்தான் இருந்தேன். நான் எழுதிய தேர்வுகளில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எல்லாம் எடுக்கவில்லை. என்னுடைய கையெழுத்தும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.

தேர்வு மோசமாக எழுதிவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே மோசமாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. தேர்வுகளை மிகவும் சகஜமாக அணுகுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்குவழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

படி, படி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும்.

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகள்''என்று கூறினார்.

English summary
Prime Minister Narendra Modi concludes his Mann Ki Baat about board and competitive exams on All India Radio (AIR). In the ending minutes Modi said, “Win, but not to defeat anyone in your life. Succeed, to fulfill your decisions, and succeed to make yourself happy.” PM Modi added, “The more brighter your (students) future will be, the future of India will be as much brighter. It’s destiny is to be carved by the youth of India only. Come forward and actively participate in the exam festival with zeal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X