கண்களை தோண்டி எடுத்து.. 6 வயது சிறுமியை கதற கதற.. உடம்பெல்லாம் காயம்.. அதிர்ச்சியில் ம.பி.!
6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது
போபால்: 6 வயது குழந்தையை கதற கதற பலாத்காரம் செய்ததுடன், அந்த சிறுமியின் கண்களையும் தோண்டி எடுத்து கொண்டு போயுள்ளனர் கொடூரர்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் இருக்கும் தாமோ என்ற பகுதியில்தான் 6 வயது சிறுமி வசித்து வருகிறாள்.. நேற்று சாயங்காலம் வீட்டிற்கு பக்கத்தில் விளையாடி கொண்டிருந்தாள். நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால், வீட்டில் பயந்துவிட்டனர். விளையாடி கொண்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தால் அங்கேயும் காணவில்லை என்பதால், தேட தொடங்கினர்.

கடைசியில் இன்று காலையில்தான் சிறுமியை ஆபத்தான நிலையில் மீட்டனர். உடல் முழுவதும் ரத்த காயங்கள்.. கண்கள் தோண்டப்பட்டு இருந்தது.. அலறி துடித்த பெற்றோர் உடனடியாக ஜபல்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.. போலீசுக்கும் புகார் தந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், விசாரணையை தொடங்கினர். இதை பற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் சிங் சவுகான் சொல்லும்போது, சக நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் சிறுமி இழுத்து செல்லப்பட்டு, மிக மிக கொடூரமாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். இறுதியில் சிறுமியின் கண்களை தோண்டி எடுத்துள்ளனர்.
கண்கள் பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது.. உடம்பெல்லாம் காயங்கள் உள்ளன.. அந்த குழந்தைக்கு இப்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிறுமியின் குடும்பத்தோடு போலீஸ் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாங்கள் பல சந்தேக நபர்களை விசாரித்தோம்... விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.. கூடிய சீக்கிரம் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துவிடுவோம்" என்றார். நாடு முழுக்க லாக்டவுனில் இருக்கும்போது, காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதல் மத்திய பிரதேசத்தை அதிர வைத்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications