For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் பாகிஸ்தானில் பிறந்தாரா?: இஸ்லாமிய தலைவர் எழுதிய புத்தகத்தால் சர்ச்சை

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இந்து கடவுள் ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானிலுள்ளது என்று இஸ்லாமிய இயக்க தலைவர் அப்துல் ரஹீம் குரேஷி கூறி உள்ளாது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரிய தலைவர் (AIMPLB) அப்துல் ரஹீம் குரேஷி என்பவர் 'பேக்ட் ஆப் அயோத்யா எபிசோட்' என்ற புத்தகத்தை உருது மொழியில் எழுதி உள்ளார். அதில் ராமர் பற்றி கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகரம் கி.மு. 7ம் நூற்றாண்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Lord Ram's birthplace Ayodhya is in Pakistan?

ஆனால் பழங்கால புவியியல் ஆய்வின்படி வடமேற்கு பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் பகுதியில் அயோத்யா என்ற பெயரில் இரு நகரங்கள் இருந்துள்ளன.

ஒன்று ராமரின் தாத்தாவான ரகு என்ற மன்னரால் அமைக்கப்பட்டது. மற்றொன்று ராமரே தனக்காக அமைத்துக் கொண்டது. ராமர் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் அயோத்தி நகருக்கு 11ம் நூற்றாண்டில் அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆய்வுகளின்படி, தற்போதுள்ள அயோத்தியில் அயோத்தி என்ற நகரமோ, ராமர் கோயிலோ இருந்திருக்க வாய்ப்பில்லை. பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு கோவிலை கட்டி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Ayodhya, the birthplace of Hindu warrior-god Ram, is in Pakistan, claims a book by a top Muslim leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X