31 கோடீஸ்வரர்கள், 20 % கிரிமினல்கள் மோதும் 8வது கட்ட தேர்தல்..!
டெல்லி: 31 பெரும் கோடீஸ்வரர்கள், 20 சதவீத கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் மோதும் 8வது கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
மே 7ம் தேதி 8வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவில் 25 தொகுதிகள்,உத்தரப் பிரதேசத்தில் 15 , பீகார் 7 மேற்கு வங்கம் 6, உத்தரகாண்ட் 5, ஹிமாச்சல் பிரதேசம் 4, ஜம்மு-கஷ்மீரில் 2 என மொத்தம் 64 தொகுதிகளில் 7ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 7 கட்டத் தேர்தல்களில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 438 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள 105 தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கு வரும் புதன் கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.
இறுதிக்கட்டமாக வரும் 12-ம் தேதி 41 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

897 வேட்பாளர்கள்
8வது கட்ட தேர்தலில் மொத்தம் 897 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 890 பேர் பின்னணி குறித்த விவரத்தை தேசிய தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

177 பேர் கிரிமினல்கள்
இந்த 890 பேரில் 177 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் ஆவர். இவர்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளனவாம்.

125 பேர் மீது கொலை வழக்குகள்
இவர்களில் 125 பேர் மீது கொலை உள்ள மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளதாம். கொலை தவிர வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இவர்கள்.

272 பேர் கோடீஸ்வரர்கள்
31 சதவீத வேட்பாளர்கள் அாவது 272 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5.90 கோடியாகும்.

ஆந்திராவில்தான் கிரிமினல்கள் அதிகம்
ஆந்திராவில்தான் பெருமளவிலான கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதாவது 57 பேர் உள்ளனர். பீகாரில் 37, உ.பியில் 52 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.

9 பேர் .. கொலை மட்டும்
கொலை வழக்குகளை மட்டுமே வைத்துள்ள வேட்பாளர்கள் 9 பேர் ஆவர்.

கொலை முயற்சியில் 32 பேர்
கொலை முயற்சி புகாருடன் கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை 32 ஆகும்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர் மீது பாலியல் பலாத்கார வழக்கு
உ.பி. மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் பவன் பாண்டே மீது பா3லியல் பலாத்கார வழக்கு உள்ளது.

கிரிமினல்களின் கூடாரம்.. பாஜக
கிரிமினல்களின் கூடாரமாக பாஜக திகழ்கிறது. காங்கிரஸ் கட்சியின் 58 வேட்பாளர்களில் 17 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பாஜக எண்ணிக்கை 28 சதவீதமாகும். ஆம் ஆத்மி எண்ணிக்கை 14 சதவீதம். பகுஜன் சமாஜின் எண்ணிக்கை 27 சதவீதமாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications