ராணுவத்தில் பணியை தொடங்கிய முதல்நாளே வைரல்.. டிரெண்டான லெப்டினன்ட் கர்னல் தோனியின் புகைப்படம்!
தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவரின் மேனேஜர் தெரிவித்த கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது.
ஸ்ரீநகர் : இந்திய ராணுவத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இன்று தனது பணியை தொடங்கினார். இன்னும் இரண்டு வாரங்கள் அவர் காஷ்மீர் எல்லையில் பணியாற்ற உள்ளார். அவரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் தலைப்புச்செய்தியில் இருந்த வீரர் என்றால் அது கண்டிப்பாக தோனியாகத்தான் இருப்பார். உலகக் கோப்பை தொடர் முழுக்க பல்வேறு விஷயங்களுக்காக அவர் வைரலானார். அதன்பின் அமரப்பலி முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கி வைரலானார். தற்போது ராணுவத்தில் இணைந்து இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறார்.
தோனிக்கு இந்திய ராணுவத்தின் மீது தீவிர ஆர்வம் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் முழு நேர பணியில் சேர வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

என்ன பயிற்சி
தற்போது தோனி இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக சிறப்பு பொறுப்பில் இருக்கிறார். அங்கு சிறப்பாக பயிற்சி பெற்ற அவர் பாலிடான் பேட்ச் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் 2 மாதம் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

எங்கு இருக்கிறார்
மேற்கு இந்திய தீவுகள் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை.தற்போது இந்தியா பாரா மிலிட்டரி ராணுவ படைப்பிரிவின் 106 பிரிவில் அவர் இணைந்து காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வருகிறார். இன்று காலைதான் அவர் அந்த படை பிரிவில் இணைந்தார். தெற்கு காஷ்மீரில் விக்டர் படை குழுவில் அவர் பணியாற்றி வருகிறார்.
|
எப்போது
ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவர் இந்த படை பிரிவில் ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய உள்ளார். அவர் இன்று ராணுவ உடையில் சக வீரர்களை காஷ்மீரில் சந்தித்தார். அவர்களுக்கு கிரிக்கெட் பேட்டில் கையெழுத்து போட்டி பரிசாக வழங்கினார்.

செம வைரல்
அவர் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்து போடும் இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. நாளை காலை தோனி பெரும்பாலும் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications