For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் வெற்றியை பறித்த ஐஏஎஸ் அதிகாரி! பாஜக ஏஜென்டாக செயல்பட வேண்டாம் என கடுகடுத்த உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளருக்காக மறுதேர்தல் நடத்தி வெற்றி பெற செய்த ஐஏஎஸ் அதிகாரியை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. பாஜகவின் ஏஜென்டாக செயல்பட வேண்டாம் எனக்கூறிய நீதிமன்றம் அவரை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

மாநகாட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தகிக்கும் தலைநகர்.. சோனியா வீடு முன் காக்கிகள்! கொதித்தெழுந்த காங்கிரஸ் - எம்பிக்களுக்கு அழைப்பு தகிக்கும் தலைநகர்.. சோனியா வீடு முன் காக்கிகள்! கொதித்தெழுந்த காங்கிரஸ் - எம்பிக்களுக்கு அழைப்பு

 தலைவர்-துணை தலைவர் தேர்தல்

தலைவர்-துணை தலைவர் தேர்தல்

அதன்பிறகு மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பஞ்சாயத்துகளின் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெற்றன. இதில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பன்னா மாவட்டம் குன்னூர் ஜன்பத் பஞ்சாயத்தில் மொத்தம் 25 உறுப்பினர்கள் உள்ள நிலையில் தலைவர், துணைதலைவர் தேர்வு செய்யும் தேர்தல் கடந்த மாதம் 27 ம் தேதி நடந்தது.

மாற்றப்பட்ட வெற்றி

மாற்றப்பட்ட வெற்றி

இந்த பஞ்சாயத்தில் துணை தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா 25 வாக்குகளில் 13 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய ஆளும் பாஜக ஆதரவு வேட்பாளர் 12 வாக்குகள் பெற்று ராம்ஷிரோமணி மிஸ்ரா தோல்வியடைந்தார்.இதையடுத்து பர்மானந்த் ஷர்மாவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி வெற்றி சான்று வழங்கினார். இதனை எதிர்த்து பன்னா கலெக்டர் சஞ்சய் மிஸ்ராவிடம், ராம்ஷிரோமணி மிஸ்ரா சார்பில் தேர்தல் முடிவு தொடர்பாக மனு மூலம் முறையிட்டார். இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவை கலெக்டர் ரத்து செய்தார். மறுநாள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் குலுக்கல் முறையில் ராம்ஷிரோமணி மிஸ்ராவை வெற்றி பெற்றதாக கலெக்டர் சஞ்சய் மிஸ்ரா அறிவித்தார்.

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாவட்ட கலெக்டர் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், துணை தலைவராக ராம்ஷிரோமணி மிஸ்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Recommended Video

    Sonia Gandhi, Rahul Gandhi வீட்டின் முன்பு Police குவிப்பு *Politics
    கடிந்து கொண்ட நீதிபதி

    கடிந்து கொண்ட நீதிபதி

    இந்த வழக்கு நீதிபதி விவேக் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விவேக் அகர்வால் கடும் வார்த்தைகளை பயன்டுத்தி கடிந்து கொண்டார். நீதிபதி விவேக் அகர்வால் கூறுகையில், ‛‛மாவட்ட கலெக்டராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் அதிகாரியாக செயல்படும் வேளையில் ஒரு அரசியல் கட்சியின்(மறைமுகமாக பாஜக) ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார். இவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட தகுதியற்றவர். இதனால் அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இயற்கையான நீதி, கொள்கையை பின்பற்றாத கலெக்டரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்''என கடிந்து கொண்டார்.

    English summary
    The Madhya Pradesh High Court has come down heavily on an IAS officer who declared the BJP candidate victorious in the panchayat vice president election in Madhya Pradesh. The court held that he was unfit to hold the post of IAS and ordered his removal from the post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X