For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிறந்தது பெண் குழந்தை.. உற்று பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம், அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் கூடிய பெண் குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியார் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர் கம்பூ எனும் பகுதியில் ஆர்த்தி குஷ்வாஹா எனும் இளம் பெண் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் கடந்த 13ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்த கமலா ராஜா மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவம்

பிரசவம்

அவருக்கு 15ம் தேதியான புதன் கிழமையன்று அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் இதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்த பெண் குழந்தை நான்கு கால்களுடன் பிறந்திருக்கிறது. அதேநேரம், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இதனால் பிரச்சினையில்லை என்றும், குழந்தை நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.கே.எஸ் தாகத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், "குழந்தை சுமார் 2.3 கி.கி வரை எடை இருக்கிறது. இரண்டு கருக்கள் ஒன்றாக வளரும்போது இந்த பிரச்னை ஏற்படுவதுண்டு. மருத்துவத்துறையில் இதனை 'இஸ்கியோபாகஸ்' என்று அழைப்போம். இதனால் பாதிக்கப்படும் கருக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிடும். அதாவது இது இரட்டை குழந்தைகளாக பிறக்க வேண்டியது.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

ஆனால், கருக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததால் உடல்கள் இணைந்து வளர தொடங்கிடும். இதனால் நான்கு கைகளுடன் கூட குழந்தைகள் பிறப்பதுண்டு. பெரும்பாலான நேரங்களில் இக்குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிடுவது வழக்கம். சில குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே கூட இறந்துவிடும். இவ்வாறு இருக்கையில் இக்குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறது. குழந்தையின் நான்கு கால்களில் 2 கால்கள் செயலற்று இருக்கின்றன. அதேபோல குழந்தையின் உடலில் வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என்று மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்.

 அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

பரிசோதனையில் பிரச்னை ஏதும் இல்லையெனில் செயலற்று இருக்கும் இரண்டு கால்களும் அகற்றப்படும். அவ்வாறு அகற்றினால் குழந்தை இயல்பாக வாழும். ஆனால் இதனை உடனடியாக முடிவு செய்ய முடியாது" என்று கூறியுள்ளார். இதேபோன்று இம்மாநிலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இளம் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகள் மற்றும் இரண்டு கால்களுடன் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இக்குழந்தை பிறந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளது. மருத்துவத்துறையில் இது போன்ற பிறப்புகளை 'டைஸ்பாலிக் பராபகஸ்' என்று சொல்வார்கள்.

இதுபோல

இதுபோல

முதலில் சொன்னது 'இஸ்கியோபாகஸ்'. இப்பிரச்னையால் கூடுதல் உடல் உறுப்புகளுடன் குழந்தை பிறக்கும். ஆனால் 'டைஸ்பாலிக் பராபகஸ்' பாதிப்பால் கூடுதல் உடல் உறுப்புகளுடன் கூடுதலாக ஒரு தலையுடன் குழந்தை பிறக்கும். சில குழந்தைகள் இவ்வாறு பிறந்து நீண்ட நாட்கள் வரை உயிர் வாழ்ந்துள்ளன. இதுபோன்ற பிரசவங்கள் தற்போதுவரை இந்திய மருத்துவத்துறைக்கு பெரும் சவாலாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஓரளவு பொருளாதார பலம் வாய்ந்த குடும்பங்கள் இக்குழந்தைகளை காப்பாற்றிவிடுவதாகவும், ஆனால் சாமானிய மக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் உயிரிழந்துவிடுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

English summary
A teenage girl in Madhya Pradesh has given birth to a baby girl with 4 legs. 2 of the four legs of the child are inactive. Similarly, is there any other problem in the child's body? Doctors are examining that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X