Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் 2024: முடிவுகளை தெரிந்து கொள்ள டெய்லி ஹன்ட்டுடன் இணைந்திருங்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் நவ.23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. எனவே, முடிவுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள டெய்லி ஹன்ட்டுடன் இணைந்திருங்கள்.

மகாராஷ்டிரா: இந்தியாவின் ஜிடிபியில் முன்னணியில் உள்ள மாநிலம். பாலிவுட் திரையுலகின் சொர்கபுரி என்றே கூட இதை சொல்லலாம். ஒருபுறம் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொழில் வளர்ச்சி, மறுபுறம் வேளாண் துறையில் ஏராளமான வருவாய். இப்படி செல்வ செழிப்பு மிக்க மகாராஷ்டிரா மாநிலத்தை யார் ஆட்சி செய்யப் போகிறார் என்கிற கேள்விக்கு நவ.23ம் தேதி பதில் தெரிந்துவிடும். கடந்த தேர்தலில் பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என்று இருந்தது. எனவே போட்டியும் சிம்பிளாக இருந்தது.

maharashtra assembly election 2024 jharkhand assembly electio 2024 by poll election 2024 2024 2024

கட்சிகள்: இந்த முறை களம் சற்று வேறுபட்டிருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைந்து, உத்தவ் தாக்ரே தலைமையில் ஓர் அணியும், ஏக்நாத் ஷிண்டே சார்பில் மற்றொரு அணியும் உள்ளன. இதில் சுவாரசியம் என்னவெனில், உத்தவ் சிவசேனா காங்கிரஸ் உடனும், ஷிண்டே சிவசேனா பாஜகவுடனும் இருக்கிறது என்பதுதான். தேசியவாத காங்கிரஸிலும் இதே நிலைமைதான். அஜித் பவார் தலைமையில் ஒரு குழுவும், சரத் பவார் தலைமையில் ஒரு குழுவும் தேசியவாத காங்கிரஸ் எனும் பெயரில் இயங்கி வருகிறது. இதில் சரத் பவார் அணி காங்கிரஸ் உடனும், அஜித் பவார் அணி பாஜகவுடனும் இருக்கிறது.

போட்டி: சுருக்கமாக சொல்வதெனில் ஆளும் கட்சியாக மகாயுதி கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் தலைமையாக பாஜக உள்ளது. கூட்டணியில் ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளிலும் மற்ற இரண்டு கட்சிகள் முறையே 81, 59 தொகுகளிலும் களம் இறங்கியுள்ளன.

மறுபுறம் காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), சிவசேனா(உத்தவ்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியாக இருக்கின்றன. இக்கட்சிகள் முறையே 101, 95 மற்றும் 86 ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

முக்கிய தொகுதிகள்: கோப்ரி-பச்பகாடி, நாகபுரி தென்மேற்கு, பாராமதி, சகோலி, வொர்லி உள்ளிட்ட தொகுதிகள் ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. இதில் கோப்ரி-பச்பகாடியில் மகாராஷ்டிரா முதல்வரான ஷிண்டே போட்டியிட்டிருக்கிறார். நாகபுரியில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும், பாராமதியில் அஜித் பவாரும், ககோலியில் நானா படோலும், வொர்லியில் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரேவும் களம் இறங்கியிருக்கின்றனர். இவர்களின் வெற்றி தோல்வியை மொத்த மாநிலமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வேட்பாளர்கள்: மாநிலம் முழுவதும் மொத்தமாக 288 தொகுதிகளில் சுயேட்சையுடன் சேர்த்து 4136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2019 தேர்தலை காட்டிலும் 27.7% அதிகமாகும்.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலமும் சமீப காலமாக அரசியல் சிக்கல்கள் அதிகம் உள்ள மாநிலமாக பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை கைதும் செய்தது. பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறையால் முதல்வர் ஒருவர் நேரடியாக கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று பேசப்பட்டது. இதனையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், சம்பாய் சோரனை இடைக்கால முதல்வராக்கினார்.

தேர்தல்: வழக்கை எதிர்கொண்டு சில மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், முதல்வர் பதவியை இழந்த சம்பாய் அதிருப்தியடைந்து பாஜகவில் இணைந்துவிட்டார். இப்படி இருக்கையில்தான் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நவ.20ல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஸ்டார் தொகுதிகள்: இம்மாநிலத்தில் முக்கிய தொகுதியாக பர்ஹைத், கண்டே, தும்கா, தன்வர் ஆகியவை இருக்கின்றன. பர்ஹைத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் களம் கண்டுள்ளார். அவரது மனைவி கல்பனா கண்டே தொகுதியிலும், ஹேமந்தின் சகோதரன் வந்த் தும்காவிலும் போட்டியிட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் தன்வரிலும், ஜார்க்கண்ட் மாணவர் சங்க தலைவர் சில்லி தொகுதியிலும் போட்டி போட்டிருக்கிறார்.

இப்படி இருக்கையில் டெய்லி ஹன்ட் தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான அப்டேட்டுகளை வழங்குகிறது. வெற்றி/தோல்வி பெற்ற அல்லது முன்னணி/பின்னணியில் உள்ள கட்சி மற்றும் அதன் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் டெய்லி ஹன்ட் விரிவாக வழங்குகிறது.

மட்டுமல்லாது லைவ் அப்டேட்களையும், எந்த கட்சி சாராமலும் உடனடியாக தகவல்களை டெய்லி ஹன்ட் வழங்குகிறது. செய்திகள் மட்டுமல்லாது வீடியோக்கள், மீம்ஸ்கள், கவர் ஸ்டோரிகளையும் டெய்லி ஹன்ட் வழங்குகிறது. தவிர சமூக வலைத்தளங்களில் உருவாகும் விவாதங்களையும் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

எனவே டெய்லி ஹன்ட்டுடன் இணைந்திருந்து தேர்தல் குறித்த அப்டேட்களை நொடிக்கு நொடி தெரிந்துக்கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+