For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிள்ளைகள் பெயருக்கு 40 மில்லியன் டாலரை மாற்றிய மல்லையா.. வங்கிகள் அதிர்ச்சி தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையா தனது பிள்ளைகள் பெயருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரிடமிருந்து பணத்தை வசூலித்து தர கோரி, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பை ஏற்படுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

Mallya transferred $ 40 million to children, say banks

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வங்கிகள் சார்பில் இந்த அதிர்ச்சி தகவல் கூறப்பட்டது. அதாவது மல்லையா தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மாற்றியுள்ளதாக வங்கிகள் கூறின. இதுபோல பணம் மாற்றம் செய்ய கூடாது என ஏற்கனவே கர்நாடக ஹைகோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவை மல்லையா மீறிவிட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மல்லையா ரூ.272.9 கோடியை சுப்ரீம் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என வங்கிகள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
The consortium of public banks on Wednesday told the Supreme court that Vijay Mallya had transferred $40 million to his children in clear violation of Karnataka High court orders. In their petition to the apex court, banks sought deposit of $40 million by Mallya with the Supreme Court. The court has given the liquor baron time till February 2 to reply to the petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X