திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மமதா பானர்ஜி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து- வீடியோ
டெல்லி: திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் இன்று தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்றைய பொது குழு கூட்டத்தின்போது வெளியிட்டார்.
Congratulations and best wishes to @mkstalin for being elected President of the DMK @arivalayam
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2018
மு.க.ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் திமுகவின் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அன்பழகன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் மமதா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications