சண்டிகரில் மொபைல் கடையில் வயதான தம்பதியரை தாக்கிய குடிகாரன்: வைரல் வீடியோ
சண்டிகர்: மொபைல் விற்பனை கடைக்குள் புகுந்த குடிகாரன் ஒருவன் உரிமையாளர்களான வயதான தம்பதியரை கடுமையாக தாக்கிய சம்பவம் சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து மிருக மனம் கொண்ட அந்த குடிகாரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் தங்களை தாக்கிய குடிகாரனை மன்னிக்க தயாராக இருக்கின்றனர் முதிய தம்பதியினர்.
சண்டிகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் செல்போன் கடையை வைத்திருக்கும் ஜொஹிந்தர் பால் மற்றும் அவரது மனைவி சந்தோஷ் ஆகியோர் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இணைஞர் ஒருவர் ஏற்கனவே செல்போன் வாங்கியது தொடர்பாக முதியவர்களின் மகனுடன் ஏற்பட்ட பிரச்சனையை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தாக்கிய குடிகாரன்
வயதான தம்பதியை சரமாரியாக தாக்கிய இளைஞர், கடையில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தினார். முதிய பெண்மணியை ஓங்கி அடித்தார். அந்த பெண் வலியில் அலறியபடி நிற்கும்போதே, அடுத்ததாக அந்த பெண்ணின் கணவரை தாக்க முயன்றார் உடனே அந்த வாலிபரை முதிய பெண்மணி தடுக்க முயற்சிக்கவே, அவரை தள்ளிவிட்டுவிட்டு பெண்ணின் கணவரான முதியவரை தனது தலையால் கண்மூடித்தனமாக தாக்கினான்.
குடிகாரன் கைது
இந்த சம்பவம் வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, அந்த குடிகார இளைஞனை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த முதியவர்கள்
இந்த சம்பவம் நடந்தபோது அந்த கடையிலும், கடை அருகேயும் நின்றிருந்தவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, யாருமே அந்த வயதான தம்பதியரை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த தாக்குதலில் அந்த வயதான பெண்ணின் தாடையிலும், முதியவரின் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
மன்னித்த முதியவர்கள்
இந்த வீடியோ யுடுயூப்பில் வெளியாகி வைராலாகியுள்ளது. தங்களது மகன் போன்ற வயதுடைய அந்த இளைஞரை தண்டிக்க விரும்பவி்லலை என்று கூறிய தம்பதியினர், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாலே போதும் என்று மிகவும் பெரிய மனதுடன் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications