மணிப்பூர்: 30 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட பாஜக அரசு! அந்த 'சாராய அமைச்சர்' யாராம்?
இம்பால்: மணிப்பூரில் 30 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருப்பது போல மதுபான தயாரிப்பு, விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நிறுவனம் ஒன்றையும் அம்மாநில பாஜக அரசு உருவாக்கி உள்ளது.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1970களில் இருந்தே மணிப்பூரில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. ஆனால் 1991-ம் ஆண்டு முதல்தான் மணிப்பூரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பாரம்பரிய மது தயாரிப்புக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

மணிப்ப்பூர் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மணிப்பூரில் முழுமையாக மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மணிப்பூர் அமைச்சரவை வழங்கி இருக்கிறது.
மணிப்பூரில் சட்டவிரோத கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு மதுவிலக்கை கைவிடுவது என முடிவு செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கொள்முதலுக்கான டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது போல மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் மதுபானங்களுக்கான அரசு நிறுவனம் MSBCL உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடயே மணிப்பூரில் பாஜக அரசு மதுவிலக்கு கொள்கையை கைவிட்டு டாஸ்மாக் பாணி நிறுவனம் உருவாக்கப்படுவது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மதுபானங்கள் விற்பனை குறித்து பேசும் போதெல்லாம் 'சாராய அமைச்சர்' என பாஜகவினர் விமர்சிப்பதும் வழக்கம். இதனை முன்வைத்து மணிப்பூரில் பாஜகவின் சாராய அமைச்சர் யார்? என்கிற விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications