For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்... பிரதமர் மோடி பகீர்!

தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்...பிரதமர் மோடி பகீர்!-வீடியோ

    காந்திநகர்: தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

    குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது பிரதமர் மோடி ஒரு இழிபிறவி எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர்.

    கட்சியிலிருந்து நீக்கம்

    கட்சியிலிருந்து நீக்கம்

    இதற்காக அவரை கட்சியில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் கட்சி மேலிடம் விளக்கமும் கேட்டுள்ளது.

    மணிசங்கர் அய்யர் குறித்து

    மணிசங்கர் அய்யர் குறித்து

    இந்நிலையில் குஜராத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாபர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், தன்னை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியதை நினைவு கூர்ந்தார்.

    என்னையா உங்களையா?

    என்னையா உங்களையா?

    அவர் என்னை அவதூறாக பேசினாரா இல்லை உங்களையா? என மக்களை பார்த்து கேட்ட பிரதமர் மோடி, என்னை அவதூறாக பேசினாரா இல்லை குஜராத்தை அவதூறாக பேசினாரா? கேட்டார். மேலும் அவர் இந்தியாவின் கலாசார சமூகத்தை அவதூறாக பேசினாரா, இல்லை என்னை அவதூறாக பேசினாரா? என்றும் மக்களை பார்த்து கேட்டார்.

    மக்கள் பார்த்துக்கொள்வார்கள்

    மக்கள் பார்த்துக்கொள்வார்கள்

    அவர் தவறாக பேசியதுபற்றி நாம் இப்போது பேச வேண்டாம் என்ற அவர் அதை குஜராத் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதற்கான அவர்கள் வரும் 18-ந் தேதி முடிவை தெரிந்து கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

    பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    மேலும் மணிசங்கர் அய்யர் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் கூறினார். அதாவது தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு சென்றார் என்றும் அங்கு சில பாகிஸ்தானியர்களை சந்தித்து மோடியை அகற்றாத வரையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என்று கூறி இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

    கூலிப்படையை அமர்த்த விரும்பினார்

    கூலிப்படையை அமர்த்த விரும்பினார்

    இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் உள்ளது என்ற மோடி தன்னை கொல்வதற்கு மணிசங்கர் அய்யர் கூலிப்படையை அமர்த்த விரும்பினார் என்றும் குற்றம்சாட்டினார். இதற்காக மக்கள் கவலைப்படவேண்டாம் என்ற பிரதமர் மோடி தன்னை தெய்வம் காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

    மூடி மறைத்த காங்கிரஸ்

    மூடி மறைத்த காங்கிரஸ்

    3 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும் இதனை மறைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சித்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் மீது கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.

    English summary
    Prime minister Modi accuses Manishangar aiyar heir mercenary from Pakistan to kill me. He said this happened 3 years before but Congress party did not take any action on that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X