For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வருட சம்பளத்தை ஏழைகளுக்கு தானம் செய்த மேகாலயா துணை சபாநாயகர்

By Siva
Google Oneindia Tamil News

ஷில்லாங்: தனது ஒரு ஆண்டு வருமானத்தை மேகாலயாவின் துணை சபாநாயகர் சன்போர் ஷுல்லாய் ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

மேகாலயா மாநில துணை சபாநாயகர் சன்போர் ஷுல்லாய். ஏழைகளின் தலைவர் என்று அழைக்கப்படும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த மாதம் வரை தான் பெற்ற சம்பளமான ரூ.18 லட்சத்து 42 ஆயிரத்து 658 மற்றும் தனக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.7 லட்சத்தையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள், ஏழை மாணவர்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று 199 பேருக்கு அந்த பணம் சென்றுள்ளது.

இது குறித்து ஷுல்லாய் கூறுகையில்,

என் ஆண்டு வருமானம் முழுவதையும் ஏழைகளுக்காக தானம் செய்துவிட்டேன். ஒரு நல்ல காரணத்திற்காக ஏதோ என்னால் கொடுக்க முடிந்ததே என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஷுல்லாயின் மாத வருமானம் ரூ.48 ஆயிரத்து 750 என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Meghalaya Deputy Speaker Sanbor Shullai has donated all of his year's earnings, over Rs 18 lakh, to BPL families and people suffering from various diseases in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X