காஷ்மீரில் பற்றி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது- மெகபூபா முப்தி சாடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களை ஏந்த காரணமே பாகிஸ்தானியர்களின் தூண்டுதல்தான் என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 50 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையுமே அடியோடு நாசமாகிப் போய்விட்டது.

இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இச்சந்திப்பின் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
- காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் கவலை கொண்டுள்ளார். இனியாவது இங்கு ரத்து சிந்துவது நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்.
- பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அழைக்கும் தைரியமான ஒரு முடிவை எடுத்தவர் நம் பிரதமர். அதேபோல் லாகூருக்கு அதிரடி பயணம் மேற்கொண்டார்.
- ஆனால் பதான்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் பற்றி எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது.
- காஷ்மீர் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தானுக்குச் சென்ற நமது உள்துறை அமைச்சரை ஒரு விருந்தினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையைக் கூட புறக்கணித்தது.
- காஷ்மீர் மக்கள் மீது சிறிதளவேனும் அக்கறை இருக்குமானால் அங்குள்ள இளைஞர்களை பாகிஸ்தானும், பிரிவினைவாதிகளும் தூண்டிவிடாமல் இருக்கட்டும்.
- பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே இளைஞர்கள் படைகளுக்கு எதிராக கையில் கற்களை ஏந்துகின்றனர்.
- முன்னாள் முதல்வரும், எனது தந்தையுமான முப்தி முகமது சயீது, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண நாட்டை ஆளும் பிரதமர் 3-ல் இரண்டு பங்கு பெரும்பாண்மை கொண்டவராக இருக்க வேண்டும் எனக் கூறுவார்.
- காஷ்மீர் பிரச்சினைக்கு பிரதமர் நரேந்திர மோடி நிரந்தர தீர்வு காண்பார் என நம்புகிறேன். மோடி தலைமையிலான ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் இனி எப்போதுமே தீர்வு ஏற்படாது.
- காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தனிநபர்கள் கொண்ட ஒரு குழுவை பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு அமைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications