லோக்சபா தேர்தலில் குஜராத்தில் மட்டுமே மோடி போட்டி- உ.பி.யில் போட்டி இல்லையாம்!!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: லோக்சபா தேர்தலில் குஜராத் மாநில தொகுதிகளில் மட்டுமே பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இதனாலேயே உத்தரப்பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக அவரது நெருங்கிய நண்பர் அமித் ஷா நியமிக்கப்பட்டார்.

அமித் ஷாவும் உத்தரப்பிரதேசத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை மும்முராக மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் தாம் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் ஒன்றில் இருந்தே போட்டியிட போவதாக மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் குஜராத்தில் இருந்து மட்டுமே மோடி போட்டியிடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications