உங்கள் நமோ நம்பர்....
2014 லோக்சபா தேர்தலையொட்டி நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் காந்தி நகரில், நமோ எண் என்ற புதிய பிரசாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது பாஜக சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தியா 272 என்ற பிரசாரத்தின் இன்னும் ஒரு பகுதியாகும்.
நமோ எண் என்பது வேறு ஒன்றும் இல்லை. நரேந்திர மோடிக்கான ஆதரவைப் பெருக்கும் நடவடிக்கையே ஆகும். இதை எஸ்.எம்.எஸ். மூலம் செய்கிறார்கள். இதன்படி, உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 78200 78200 என்ற எண்ணுக்கு அனுப்பி நாம் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையும் இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யச் சொல்லி அவர்களது ஆதரவையும் உறுதிப்படுத்தச் சொல்லலாம்.
மிஷன் 272 என்ற மாபெரும் இலக்கை அடைவதற்கு, தேசிய அளவிலான ஆதரவை திரட்டும் வகையிலேயே இந்த நமோ எண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி ஆதரவாளர்கள் மோடிக்கும், அவர் பிரதமாரவதற்கும் தங்களது ஆதரவை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.
மேலும் இந்த எஸ்.எம்.எஸ். மூலம் தங்களது பகுதி வாக்குச் சாவடி உள்ளிட்ட விவரங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் உள்ளூரைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோரின் விவரங்களையும் இதன் மூலம் அறிய முடியும். வாக்களிக்கும்போது ஏதேனும் தேவைப்பட்டாலும் இந்த எஸ்.எம்.எஸ், மூலம் அதைப் பெறலாம்.
மேலும், சம்பந்தப்பட்ட தொகுதியின் பாஜக வேட்பாளர் யார், பிரசார விவரங்கள் இன்ன பிறவற்றையும் இந்த நமோ எண் மூலம் பெற முடியும்.
சரி, இதை எப்படிப் பெறுவது?
முதலில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 78200 78200 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.

எப்படி அதிகம் பேரை நான் சேர்ப்பது?
இதில் உங்களை மட்டுமல்லாமல், உங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களையும் கூட சேர்க்க முடியும். அதற்கு உங்களது நண்பர்கள், குடும்பத்தினரை இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொல்லி, அனுப்பும்போது, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை முதலில் டைப் செய்து, அடுத்து உங்களது மொபைல் எண்ணை டைப் செய்து பிறகு எஸ்.எம்எஸ். அனுப்பச் சொல்ல வேண்டும்.
மிஷன் 272+ தொண்டர்கள், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்குமான பாஜகவின் தேர்தல் அறிக்கையை இந்த நமோ எண்ணில் பதிவு செய்து கொள்பவர்களுக்கு அளிப்பார்கள்.
இந்த நமோ எண் திட்டத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறவர்களுக்கு நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
தற்போது இந்தியா 272+ இயக்கத்தில் பல லட்சம் பேர் இணைந்துள்ளனர். கள நடவடிக்கைள், என் கனவு இந்தியா பிரசாரம், பாஜக தலைவர்களுடன் சந்திப்பு, அமைப்பு ரீதியான செயல்பாடுகள் மூலம் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இன்று இந்தியா 272+ திட்டமானது, அனைத்து இந்தியா 272 தொண்டர்களின் முன்னுரிமை களமாக மாறியுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் மற்றும் நேரடி களப் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நமோ எண் தொடக்கத்தின் மூலம், ஒவ்வொரு வாக்குச் சாவடியின் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications