For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மூக்கை மூடிக்கொண்டு பேசிய மோடி.. எதற்காக அப்படி செய்தார் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மூக்கை மூடிக்கொண்டு பேசிய மோடி...வீடியோ

    காந்திநகர்: காங்கிரஸ் கட்சியின் மேல்தட்டு மனநிலை குறித்த விமர்சனத்தை, குஜராத் தேர்தல் பிரசாரத்தில், தொடர்ந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குஜராத்தின் மோர்பி பகுதிக்கு வந்தபோது மூக்கை மூடிக்கொண்டதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

    தான் ஏழை என்பதால்தான் பிரதமராக உயர்ந்ததை காங்கிரசால் பொறுக்க முடியவில்லை என மோடி ஏற்கனவே ஒரு பிரசார கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தாரா்.

    மூக்கை மூடிக்காட்டினார்

    மோர்பி நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்திரா காந்தி மூக்கை மூடியபடி வந்த போட்டோ அப்போது, சித்ரலேகா இதழில் வெளியானதாக குறிப்பிட்டார். மேலும், இந்திரா காந்தியை போலவே, மூக்கை மூடி காண்பித்தார்.

    மனிதாபிமான மணம்

    மனிதாபிமான மணம்

    அதேநேரம், ஜனசங்கம், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு் மோர்பியின் தெருக்கள் வாசம் வீசுகிறது. மனிதாபிமானத்தின் நறுமணம் அது என்று மோடி தெரிவித்தார்.

    கொள்ளை பற்றியே நினைப்பு

    கொள்ளை பற்றியே நினைப்பு

    ஜிஎஸ்டி வரியை கப்பார் சிங் (ஷோலே பட கொள்ளையன் பெயர்) வரி என ராகுல் காந்தி குறிப்பிட்டதை நினைவுபடுத்திய மோடி, நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு எப்போதும் கொள்ளை பற்றியேதான் நினைப்பு இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று சாடினார்.

    பாஜகவின் வளர்ச்சி பெரியது

    பாஜகவின் வளர்ச்சி பெரியது

    காங்கிரசை பொறுத்தளவில் வளர்ச்சி என்பது அடி பம்பு ஏற்படுத்தியதுதான். ஆனால் பாஜகவோ, நர்மதா ஆற்று நீரை குழாய்களில் வீடுகளுக்கு கொண்டுவந்ததை சாதனையாக சொல்லும் என்றார் மோடி.

    English summary
    "When Indira Ben came to Morbi,I remember there was a photo of her in Chitralekha Magazine with a hanky over her nose due to the foul smells, but for Jansangh/RSS the streets of Morbi are fragrant,its the fragrance of humanity" says PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X