For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு கைக்காசாக 101 ரூபாய் பணம் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமராக பதவியேற்கவுள்ள தனது மகன் நரேந்திர மோடிக்கு அவரது தாயார் ஹீராபாய், குஜராத்திலிருந்து இன்று டெல்லிக்குக் கிளம்புவதற்கு முன்பு ரூ. 101 பணம் மற்றும் இனிப்புகளை வழங்கி வழியனுப்பி வைத்துள்ளார்.

நாட்டுக்கே ராஜாவானாலும் தாய்க்குப் பிள்ளைதானே என்பதை இந்த அன்புப் பரிசு நிரூபித்துள்ளது.

90 வயதாகும் ஹீராபாயிடம் வாழ்த்தையும், வழிச் செலவுக்குப் பணத்தையும் பெற்றுக் கொண்டு வாய் நிறைய தாயின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டுதான் டெல்லி வந்துள்ளார் மோடி.

தாயிடம் ஆசி

தாயிடம் ஆசி

குஜராத் அரசியலிலிருந்து இன்று விடை பெற்றார் மோடி. டெல்லிக்குப் புறப்பட்டார். அதற்கு முன்பாக தனது தாயார் ஹீராபாயை அவர் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

சாப்பிட ஸ்வீட்.. கைக்காசாக ரூ. 101

சாப்பிட ஸ்வீட்.. கைக்காசாக ரூ. 101

மகனை வாழ்த்திய ஹீராபாய், அவருக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ரூ. 101 பணத்தையும் வழிச் செலவுக்கு வைத்துக் கொள் என்று கூறி கையில் கொடுத்தார். அதை சந்தோஷத்துடன் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார் மோடி.

அம்மாவைப் பார்த்தேன்...

அம்மாவைப் பார்த்தேன்...

இதுகுறித்து டிவிட்டரில் மோடி, எனது தாயாரைச் சந்தித்த பிறகு டெல்லிக்குக் கிளம்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மக்களுக்காகப் பாடுபடு

மக்களுக்காகப் பாடுபடு

மோடியிடம், மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவரது தாயார் அறிவுரை வழங்கினார்.

குட்பை குஜராத்

குட்பை குஜராத்

இதையடுத்து டெல்லி புறப்பட்ட நரேந்திர மோடி, 6 கோடியே 25 லட்சம் குஜராத் மக்களிடம் பிரியாவிடை பெறும் விதமாக குட்பை குஜராத் என்று கூறினார்.

English summary
PM-designate Narendra Modi on Thursday left Gandhinagar for Delhi after an emotional farewell from his 90-year-old mother. She blessed her son and gifted him Rs.101. Heeraba offered her son sweets as he set off for Delhi to take oath as the country's new prime minister on May 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X