For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பேஸ்புக்"குக்கு செப்டம்பர் 27ம் தேதி விசிட் அடிக்கிறார் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27ம் தேதி அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்லவுள்ளார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்கின் அழைப்பை ஏற்று மோடி, அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 27ம் தேதி பாலோ ஆல்டோவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு மோடி செல்கிறார்.

Modi to visit Facebook HQ on September 27

இன்று பிரதமர் மோடியை, மார்க் சந்தித்துப் பேசினார். அப்போது அவரை பாலோ ஆல்டோவிற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

தான் பேஸ்புக் அலுவலகத்திற்குச் செல்லவிருப்பது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸும் போட்டுள்ளார் பிரதமர் மோடி.

முன்னதாக பிரதமரைச் சந்திப்பதற்கு முன்பு மார்க் போட்ட ஸ்டேட்டஸில், பிரதமர் மோடியும், நானும் சமூக பொருளாதர சவால்களைச் சந்திப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளோம் என்று கூறியிருந்தார்.

மேலும் தான் பிரதமரைச் சந்திக்கும்போது என்ன மாதிரியான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கலாம் என்று தனக்கு யோசனை தெரிவிக்குமாறும் தனது நண்பர்களிடம் பேஸ்புக் மூலமாக கோரிக்கையும் வைத்திருந்தார். அதற்கேற்ப இன்று பிரதமரைச் சந்தித்தபோது அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவிருப்பது இது 2வது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்கா போயிருந்தார். இந்த நிலையில் மீண்டும் அதே செப்டம்பரில் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.

பிரதமரை பாலோ ஆல்டோவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக மார்க் தெரிவித்துள்ளார். பிரதமரின் பயணம், பேஸ்புக்குக்கே கெளரவம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 28ம் தேதி கலிபோர்னியாவிலிருந்து திரும்பும் பிரதமர், அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

English summary
Prime Minister Modi is all set to visit Facebook HQ in the US on September 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X