For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதற்றத்தை வெல்வது எப்படி? - மோதி எழுதிய புத்தகம்

By BBC News தமிழ்
|
நரேந்திர மோதி
Getty Images
நரேந்திர மோதி

பதற்றத்தை வெல்வது குறித்து ஒரு புத்தகத்தை பிரதமர் மோதி எழுதி உள்ளார். இந்தப் புத்தகத்தின் பெயர் ’தேர்வு வீரர்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் நரேந்திமோதி, பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் அழுத்தங்கள் இல்லாமல் பரீட்சை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து உரை நிகழ்த்தி வருகிறார்.

ஆனால் இந்த முறை பிரதமர் அது குறித்து ஒரு புத்தகமே எழுதிவிட்டார்.

பரீட்சையை எதிர்கொள்வது குறித்து புத்தகம் எழுதும் முதல் இந்திய பிரதமர் இவர்.

பல முன்னாள் இந்திய பிரதமர்கள் கவிதை தொகுப்பு உட்பட பல்வேறு விதமான புத்தகங்கள் எழுதி இருந்தாலும், மாணவர்களுக்கான பரீட்சை அழுத்தங்கள் குறித்து புத்தகம் எழுதும் முதல் பிரதமர் நரேந்திர மோதி மட்டுமே.

இது எழுத்தாளர் நரேந்திர மோதியின் முதல் புத்தகம் அல்ல. இதற்கு முன்பே அவர், சமூக நல்லிணக்கம் (Social Harmony), இந்தியாவுடைய சிங்கப்பூர் கதை, பயணம் (கவிதை தொகுப்பு) உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகம் எழுதி இருக்கிறார்.

இந்த புத்தகம் சனிக்கிழமை (பிப்ரவரி 2) அன்று விற்பனைக்கு வந்தது.

பென்குயின் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டு உள்ளது.

மாணவர்கள் விரும்புவார்கள்:

பிபிசியிடம் பேசிய பென்குயின் பதிப்பகத்தின் தலைமை ஆசிரியர் ஐஸ்வர்யா, "பிரதமரின் இந்த தேர்வு வீரர்கள் புத்தகத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும், தேர்வு தொடங்குவதற்கு முன், பிரதமர் வானொலியில் உரையாற்றி, மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பார். இந்த புத்தகத்திற்கான யோசனை அங்கிருந்துதான் வந்தது" என்றார்.

மாணவர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இந்த புத்தகம் எழுதபட்டு இருக்கிறது என்கிறது பென்குயின் பதிப்பகம். மாணவர்களே பயிற்சியில் ஈடுப்படும் வண்ணம் பல்வேறு அத்தியாயங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

பெற்றோர் -ஆசிரியர்களுக்கான யோசனைகள்:

இந்தப் புத்தகத்தில் ஏராளமான வரைகலை படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது இந்த புத்தகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. இதையெல்லாம் கடந்து, இந்த புத்தகத்தில் யோகா குறித்தும் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புத்தகம் மாணவர்களின் நண்பனாக இருக்கும் என்கிறார்கள் பதிப்பாளர்கள்.

208 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை 90 ரூபாய்.

தேர்வு காலங்களில் மாணவர்கள் மட்டும் அல்ல, அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். தேர்வு வீரர்கள் எனும் இந்தப் புத்தக்கத்தில், மன அழுத்தங்களை எப்படி குறைப்பது என ஆலோசனை வழங்கி இருக்கிறார் பிரதமர் மோதி.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மன் கி பாத் உரையில் பிரதமர் மோதி, தேர்வு கால அழுத்தங்கள் குறித்தும், மகிழ்ச்சி குறித்தும் பேசினார். அது குறித்தும் இந்த புத்தகம் பேசுகிறது.

இந்த புத்தகத்தில் மாணவர்களுக்கான கதைகளும் உள்ளன. இந்தப் புத்தகத்தின் மூலமாக மாணவர்களின் நண்பனாக விரும்புகிறார் பிரதமர் என்கிறது பென்குயின் பதிப்பகம்.

இது மட்டுமல்ல, இந்தப் புத்தகத்தில் மாணவர்களிடம் உள்ள போட்டி மனப்பான்மை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. தங்களுடைய முந்தைய சாதனைகள் தான் ஒரு மாணவன் முன் இருக்கும் சவால், ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய முந்தைய சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்கிறது இந்த புத்தகம்.

சச்சின் டெண்டுல்கர் எப்படி தன் வாழ்நாள் முழுவதும், தன்னுடைய முந்தைய சாதனைகளை முறியடித்தார் என்று விளக்குகிறது இந்த தேர்வு வீரர்கள் புத்தகம்.

மன அழுத்தத்தில் மாணவர்கள்

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015 ஆம் ஆண்டு தரவுகள் படி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதற்கு பெரும்பாலும் தேர்வு தரும் மன அழுத்தமே காரணமாக இருக்கிறது.

மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதில் மஹாராஷ்ட்ரா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் சட்டீஸ்கர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மாணவர்களின் தற்கொலையை எப்படி குறைப்பது, தடுப்பது என்பதுதான் அரசாங்கத்தின் முன் இருக்கும் சவால்.

வரும் பிப்ரவரி 16ஆம் தேதி பிரதமர் மோதி பரீட்சைகால அழுத்தங்கள் குறித்து மாணவர்களிடம் உரையாடுகிறார். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3500 மாணவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
மாணவர்கள், பரீட்சை கால பதற்றத்தை வெல்ல ’தேர்வு வீரர்கள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் பிரதமர் மோதி.பல முன்னாள் இந்திய பிரதமர்கள் கவிதை தொகுப்பு உட்பட பல்வேறு விதமான புத்தகங்கள் எழுதி இருந்தாலும், மாணவர்களுக்கான பரீட்சை அழுத்தங்கள் குறித்து புத்தகம் எழுதும் முதல் பிரதமர் நரேந்திர மோதி.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X