காங்., எம்எல்ஏக்களிடம் கட்டுக்கட்டாக பணம்! ஜார்கண்டில் பாஜகவால் ஆட்சி கலைப்பா? திரிணாமுல் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போலீசில் சிக்கிய நிலையில் ஜார்கண்டில் ஆட்சி கலைக்க பாஜக சதி செய்துள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புதிய கோரிக்கை ஒன்றை வைத்து மத்திய விசாரணை அமைப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் பஞ்ச்லா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராணிஹட்டி வழியாக காரில் அதிகளவில் பணம் எடுத்து செல்லப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யபபட்டார். மேலும் அவருக்கு நெருக்கமான அர்பிதா முர்கஜியின் ப்ஙகளாவில் ரூ.28 கோடி கைப்பற்றப்பட்டது நாட்டை உலுக்கிய நிலையில் இந்த தகவல் கிடைத்தது.

கட்டுக்கட்டாக பணத்துடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

கட்டுக்கட்டாக பணத்துடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இதனால் ராணிஹட்டி வழியாக செல்லும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு காரில் கட்டுக்கட்டாக ஏராளமான பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஜம்தாரா தொகுதி எம்எல்ஏ இர்பான் அன்சாரி, கிஜ்ரி தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் கச்சாப், கோபேிரா தொகதி எம்எல்ஏ நமன் பிக்சல் கொங்கரி என்பதும் தெரியவந்தது.

பணம் பறிமுதல் -தீவிர விசாரணை

பணம் பறிமுதல் -தீவிர விசாரணை

இதையடுத்து பணத்தை கைப்பற்றிய போலீசார் 3 எம்எல்ஏக்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். கட்டுக்கட்டாக பணம் எங்கிருந்து எடுத்து செல்லபடுகிறது?, எதற்காக எடுத்து செல்லப்படுகிறது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இருப்பினும் அதற்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆட்சி கவிழ்ப்பு சதியா?

ஆட்சி கவிழ்ப்பு சதியா?

இந்நிலையில் தான் ஜார்கண்டில் ஆட்சியை கலைக்க பாஜக முயற்சித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் உள்ளார். இங்கு ஆட்சியை கலைக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக மீது பாய்ந்த ஜெய்ராம் ரமேஷ்

பாஜக மீது பாய்ந்த ஜெய்ராம் ரமேஷ்

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "ஹவுராவில் பணம் பிடிபட்டதன் மூலம் ஜார்க்கண்டில் பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை'அம்லமாகி உள்ளது. டெல்லியில் இருந்தபடி மகாராஷ்டிராவில் ஆட்சியை கலைத்ததை போல் ஜார்கண்டிலும் செய்ய வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்'' என குறிப்பிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் கூறுகையில், ‛‛மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க அசாமில் எம்எல்ஏக்களை தங்க வைக்கப்பட்டனர். இதனால் அசாம், ஆட்சி கலைப்புக்கான மையப்புள்ளியாக மாறியது என்பது நமக்கு தெரியும். அதேபோல் தற்போதும் பாஜகவினர் சதிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் இது தெளிவாக பரியவரும். வரும் காலங்களில் விஷயங்கள் தெளிவாகும்'' என்றார்.

விரிவான விசாரணை கோரும் திரிணாமுல்

விரிவான விசாரணை கோரும் திரிணாமுல்

இதற்கிடையே தான் பிடிபட்ட எம்எல்ஏக்களிடம் பணம் எங்கிருந்தது கிடைத்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க அமைச்சர் சஷி பஞ்சா கூறியுள்ளார். இதற்கிடையே மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சம்பவம் குறித்து மத்திய விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் எனும் வகையில் பதிவிட்டுள்ளது.

மத்திய ஏஜென்சி முன்வருமா?

மத்திய ஏஜென்சி முன்வருமா?

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛‛ குதிரை பேரம் மூலம் ஜார்கண்டில் நடக்கும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முணுமுணுப்புகள் உள்ளன. இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்களிடம் மேற்கு வங்கத்தில் பணம் சிக்கியுள்ளது. இந்த பணத்துக்கான ஆதாரம் என்ன? என்பது பற்றி ஏதேனும் மத்திய ஏஜென்சி தானாக முன்வந்து விசாரணை நடத்துமா?
அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே விதிகள் பொருந்துமா?'' என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சகோதரர் மறுப்பு

சகோதரர் மறுப்பு

இதற்கிடையே எம்எல்ஏ இர்பான் அன்சாரியின் சகோதரர் இம்ரான் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துள்ளார். இதுபற்றி இம்ரான் கூறுகையில், ‛‛ எனது சகோதரரை வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது. எனது சகோதரர் ஒவ்வொரு ஆண்டும் பழங்குடி மக்களுக்கு புடவை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்குவார். பழங்குடி மக்களுக்காக பரிசுகள் வாங்க தான் பணம் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டை போல் இந்த ஆண்டும் ஜார்கண்டிலிருந்து கொல்கத்தாவின் படா பஜாருக்கு பொருட்கள் வாங்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்படவில்லை. நான் அவர்களை சந்திக்க முயற்சிக்கிறேன். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+