பருவமழை சூடு பிடிப்பதற்கான அறிகுறிகள்... தனியார் வானிலை ஆய்வு மையம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென் மேற்குப் பருவ மழையின் தாமதத்தால் மத்திய இந்தியாவில் மழைப் பொழிவில் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பருவ மழை சூடு பிடிக்கும், இதனால் மழைப் பொழிவிலும் குறைவு இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மத்திய இந்தியாவில் இந்த பருவ மழைக் காலத்தில் போதிய மழை கிடைக்காத நிலைதான் தற்போது உள்ளது. ஜூன் மாதம் முதலே பற்றாக்குறையில்தான் உள்ளது இந்தியாவின் மத்தியப் பகுதி.

ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் பருவ மழை சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இருந்ததை விட தற்போது மழைப் பற்றாக்குறை குறைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை குறைவு...

பற்றாக்குறை குறைவு...

இது குறித்து ஸ்கைமெட் கூறுகையில், மத்திய இந்தியாவில் கடந்த வாரத்தில் 60 சதவீத மழைப் பற்றாக்குறை இருந்தது. தற்போது அது ஜூலை 13ம் தேதி நிலவரப்படி 57 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சிலநாட்களாக பெய்த மழையே இதற்குக் காரணம்.

கூடுதல் மழைக்கு வாய்ப்பில்லை...

கூடுதல் மழைக்கு வாய்ப்பில்லை...

ஆனால் ஜூன் மாதத்தில் பெய்திருக்க வேண்டிய மழை கிடைக்காமல் போனதால் கூடுதல் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று அது கூறியுள்ளது.

குறைவான மழையளவு....

குறைவான மழையளவு....

மத்திய இந்தியாவில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் 303.3 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் தற்போது இதுவரை 137.6 மில்லிமீட்டர் மழைதான் பெய்துள்ளது.

வட இந்தியாவில்...

வட இந்தியாவில்...

வட மேற்கு இந்தியாவில், ஜூன் மாதத்தில் 73.1 மில்லிமீட்டர் மழைதான் பெய்துள்ளது. இங்கு வழக்கமாக இந்த காலகட்டத்தில் 156.5 மில்லிமீ்ட்டர் மழை பெய்யும்.

தீவிர மழை பெய்யும்...

தீவிர மழை பெய்யும்...

தற்போது மத்திய இந்தியாவிலும், வட மேற்குப் பகுதிகளிலும் மழை தீவிரமடைவதற்கான சாத்தியக் கூறுகள், சாதகமாக உள்ளதாகவும், எனவே இங்கு தென் மேற்குப் பருவ மழை விளாசும் வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கலாம்...

எதிர்பார்க்கலாம்...

அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் ஒடிசா கடற்கரை வரை நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய இந்தியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை தீவிரமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கும்...

டெல்லிக்கும்...

டெல்லியிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+