காணாமல் போன அம்மாவை வெப்சைட் தொடங்கி தேடி வரும் மகன்...!
பெங்களூரு: காணாமல் போய் விட்ட தனது 65 வயது தாயாரை வெப்சைட் தொடங்கி, பரிசு அறிவித்துத் தேடி வருகிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர்.
அந்த சாப்ட்வேர் என்ஜீனியரின் பெயர் சதீஷ் ஷெட்டி. உடுப்பி மாவட்டம் குண்டாபூர் தாலுகாவில் உள்ள கோர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த வீட்டிலிருந்து இவரது தாயார் மாலதி ஷெட்டி ஜூன் 24ம் தேதி புதன்கிழமை வெளியே போனவர் காணாமல் போய் விட்டார்.
உறவினர் வீட்டுக்குப் போன தாயார் வீடு திரும்பவில்லை என்று கூறுகிறார் சதீஷ். இந்த நிலையில் தனது தாயாரைத் தேடி வரும் ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். அதில் தனது தாயாரின் புகைப்படம், விவரம் உள்ளிட்டவற்றை போட்டுள்ளார்.

மாலதி ஷெட்டி
ஆகஸ்ட் 8ம் தேதி http://www.mommissing.org/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதில், எனது தாயார் மாலதி ஷெட்டி, கோர்கி கிராமம், சாருகோட்டிகே என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜூன் 24ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.

ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி
வீட்டில் எனது தந்தை கேடூர் பாஸ்கர் ஷெட்டி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), சகோதரி சரளா ஷெட்டி மற்றும் அவரது கணவர் டாக்டர் ராம் மனோகர் ஷெட்டி ஆகியோரும் வசித்து வருகின்றனர்.

ஜூன் 24ம் தேதி மாயம்
ஜூன் 24ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தனது உறவினர் வீட்டுக்குப் போவதாக சொல்லி விட்டுக் கிளம்பினார். ஆனால் அவர் வரவில்லை.

வெளிநாட்டிலிருந்து வந்து தேடிய மகன்
எனது தாயார் காணாமல் போன தகவல் கிடைத்ததும் வெளிநாட்டில் வசித்து வரும் நான் ஜூலை 4ம் தேதி தாயகம் திரும்பினேன். ஜூலை 19ம் தேதி வரை அங்கே தங்கியிருந்து எனது தாயாரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

உடுப்பி எஸ்.பியுடன் சந்திப்பு
உடுப்பி எஸ்.பி. அண்ணாமலையை சந்தித்து எனது தாயாரைத் தீவிரமாகத் தேடும்படி கேட்டுக் கொண்டேன். மேலும் ஜூலை 17ம் தேதி உடுப்பியில் செய்தியாளர்கள் கூட்டத்தையும் கூட்டி தகவல் தெரிவித்தேன்.

போஸ்டர் அடித்தும் தகவல் இல்லை
எனது தாயாரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களையும் கோவில்கள், பஸ் நிலையங்களில் ஒட்டியுள்ளோம். எனது தாயார் காணாமல் போய் 45 நாட்களாகி விட்டது. இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் சதீஷ் ஷெட்டி.

ரூ. 1 லட்சம் பரிசு
தனது தாயார் குறித்த தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தருவதாகவும் சதீஷ் ஷெட்டி கூறியுள்ளார். இந்த மூதாட்டி குறித்த தகவல் உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் சதீஷ் ஷெட்டிக்குத் தகவல் தரலாமே.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications