உனக்கு 18.. எனக்கு 28.. கள்ளக்காதல்.. கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி.. சிக்க வைத்த மாமியார்!
அமராவதி: 18 வயது இளைஞருடன் 28 வயது பெண்ணுக்கு கள்ளக்காதல் மோகத்தால் தனது கணவரை பிரஷர் குக்கரால் ஓங்கி அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கும் மிருதுளா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் முரளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்தது.

நல்ல வாய்ப்பு
நல்ல வாய்ப்பு என்பதாலும் மனைவி, மகனை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இருவரையும் ஆந்திராவில் விட்டுவிட்டு முரளி மட்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அண்மையில் மனைவியையும் மகனையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு முரளி வந்தார்.

இன்ப அதிர்ச்சி
வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் தனது மனைவி, மகனை வீட்டில் விட்டு முரளி வேறு இடத்தில் வசிக்கும் தனது தாயை பார்க்க சென்றிருந்தார். அங்கு சென்ற முரளி 2 நாட்களாகியும் வீடு திரும்பாததால் மாமியாரிடம் மிருதுளா தெரிவித்துள்ளார்.

மகன் குறித்து புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார், உடனடியாக தனது மகன் குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மிருதுளாவையும் போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது செல்போனை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். முரளி காணாமல் போனதாக கூறப்பட்ட நாள் அன்று நள்ளிரவு மிருதுளா 18 வயது இளைஞருடன் நீண்ட நேரம் போனில் பேசியது தெரியவந்தது.

மிருதுளாவிடம் விசாரணை
அந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்தவர். இதையடுத்து மிருதுளாவிடம் போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். அப்போதுதான் பேராசிரியருக்கு என்ன ஆனது என்பதற்கான மர்மம் விலகியது. கணவர் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில் 28 வயதாகும் மிருதுளாவுக்கு 18 வயது இளைஞர் சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலனுடன் காதலை வளர்த்த மிருதுளா
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி மிருதுளாவை சங்கர் அவரது வீட்டுக்கே போய் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இவ்வாறு கேட்பாரற்று இவர்களது கள்ளக்காதல் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே சென்ற நிலையில்தான் கணவர் முரளி வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டார்.

இன்ப அதிர்ச்சி
முரளி இன்ப அதிர்ச்சி கொடுத்தாலும் அது மிருதுளாவுக்கு துன்பமாகவே இருந்தது. நீண்ட நாள்கள் கழித்து வெளிநாட்டிலிருந்து வந்த முரளி, தனது மனைவியை நெருங்கினாலும் மிருதுளா அதற்கு பிடிகொடுக்காமல் விலகி விலகியே சென்றது தெரியவந்தது. இதனால் முரளிக்கு மிருதுளா மீது சந்தேகம் எழுந்தது.

முரளி
இந்த நிலையில்தான் தாயை பார்க்க முரளி செல்வதாக மிருதுளாவிடம் கூறிவிட்டு சென்றார். இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட மிருதுளா , சங்கருக்கு போன் செய்து தன்னால் சந்திக்க முடியாதது குறித்து அழுதுள்ளார். கணவர் இருந்தால் நம்மால் தனியே சந்திக்க முடியாது என மிருதுளா கூறியதை கேட்ட சங்கருக்கு முரளி மீது ஆத்திரம் வந்தது.

கொலை செய்துவிட ஐடியா
இதனால் அவரை கொலை செய்துவிடலாமா என மிருதுளாவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு அவரும் கள்ளக்காதல் மோகத்தில் சம்மதம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து சம்பவ நாளன்று இரவு முரளி தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தலையில் குக்கரை எடுத்து ஓங்கி அடித்துள்ளார் மிருதுளா. பின்னர் சங்கரை அழைத்து வந்து முரளியின் சடலத்தை வேறு இடத்தில் தூக்கி போட்டுவிட்டு வந்துள்ளனர்.

சடலம்
இதையடுத்து இரு நாட்கள் கழித்து முரளியின் சடலத்தை வீசிய இடத்திறகு சென்று பார்த்த போது முரளியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. யாருக்கும் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சடலத்தை இருவரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் முரளியின் சடலத்தை கைப்பற்றினர்.

7 வயது குழந்தை
கள்ளக்காதல் மோகத்தால் தனது 7 வயது குழந்தை குறித்து கூட சிந்திக்காத மிருதுளாவையும் தன்னை விட வயதில் 10 வயது மூத்தவர் என்ற வித்தியாசத்தையும் அவருக்கென அழகான குடும்பம் இருக்கிறது என்பதையும் பார்க்காத முரளியையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications