உயரமான ஹீல்ஸ் அணிந்து தவறி விழுந்த பெண்.. பரிதாபமாக இறந்த 6 மாத குழந்தை!
மஹாராஷ்டிராவில் இருக்கும் தானேவில் ஹீல்ஸ் செருப்பு ஒன்று 6 மாத குழந்தையின் உயிரை பறித்து இருக்கிறது.
Recommended Video

தானே: மஹாராஷ்டிராவில் இருக்கும் தானேவில் ஹீல்ஸ் செருப்பு ஒன்று 6 மாத குழந்தையின் உயிரை பறித்து இருக்கிறது. உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடக்கும் போது தவறி விழுந்த ஃபெமிதா ஷேக் என்ற பெண்ணின் குழந்தை மரணம் அடைந்துள்ளது.
ஃபெமிதா ஷேக் என்ற 23 வயது பெண் மஹாராஷ்டிராவில் உள்ள தானேவில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தனது 6 மாத கை குழந்தையுடன் சென்றுள்ளார். ஃபெமிதா மிகவும் பெரிய ஹீல்ஸ் உள்ள செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஃபெமிதா திருமண மண்டபத்தின் முதல் மாடியில் நடந்து பேசிக்கொண்டு இருந்த போது தவறி விழுந்துள்ளார். ஹீல்ஸ் செருப்பு தடுக்கி நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அவர் மாடியில் இருந்து விழும் போது அவர் கையில், அவரது 6 மாத குழந்தையும் இருந்துள்ளது.
மாடியில் இருந்து விழுந்த ஃபெமிதாவிற்கு தலையில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த 6 மாத குழந்தைக்கு தலையில் மிகவும் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது. இரண்டு பேரையும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அந்த குழந்தை மரணம் அடைந்துள்ளது. இதனால் ஃபெமிதா தற்போது மோசமான மனநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications