அழகிய லைலா.. இன்ஸ்டாவில் காதல் வலை! தனியே சிக்கிய மாணவியை சீரழித்த கும்பல்.. மலைத்துப் போன ம.பி.!
புனே : இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை நேரில் சந்திக்கலாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள நிலையில், சிறுவர்கள் இருவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 4 பேருக்கும் தொடர்பே கிடையாது எனவும், மாணவியை தனி தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமூக வலைதள ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் கைகள் இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் கைகளில் செல்போன்கள் இல்லாமல் மாணவர்களையோ இளைஞர்களையோ காண முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை நேரில் சந்திக்கலாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்களை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள நிலையில், இருவரை தேடி வருகின்றனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் பெரும் தொழிலதிபர் ஒருவரின் 18 வயது நிரம்பாத மகள் அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் படித்து வந்திருக்கிறார். பெற்றோர்கள் வசதியான குடும்பத்தினர் என்பதால் மாணவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அப்படி அவர்களாகவே வாங்கி கொடுத்த செல்போன் தான் அந்த மாணவியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் உலாவிய அந்த மாணவி சிலருடன் மெசஞ்சரில் பேசி வந்திருக்கிறார். அப்படித்தான் இன்ஸ்டாகிராமில் நான்கு பேர் அவருடன் பழகி இருக்கின்றனர். இரவு முழுவதும் நான்கு பேருடன் தனித்தனியாக அவர் சாட்டிங் செய்து வந்திருக்கிறார் .இந்த நிலையில் சிறுமிக்கு மற்றவர்களுடன் தொடர்பு இருப்பது அந்த நான்கு ஆண்களுக்கும் தெரியவில்லை. தொடர்ந்து சிறுமியுடன் பேசிவந்த அவர்கள் சிறுமியை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை புனேவின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி படித்த கல்லூரியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
அந்த கருத்தரங்கில் ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக அழைத்து கவுன்சிலர்கள், தாங்கள் ஏதேனும் சிக்கலைகளை சந்தித்து இருக்கிறீர்களா? என கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் தன்னை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதையும் அவர் கூறியிருக்கிறார். இதை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 18 வயது உட்பட்ட இருவர் பிடிபட்டிருக்கும் நிலையில் அவர்கள் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications