ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சக வீரர்களுடன் சிக்கிய டோணி.. டெல்லியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இன்று ஜார்கண்ட் மற்றும் வங்காள அணிகள் அரை இறுதியில் மோதுவதாக இருந்தது. இதையொட்டி டோணி தலைமையிலான ஜார்கண்ட் அணியினர் டெல்லி, துவாரகா பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

MS Dhoni rescued from hotel fire in Dwarka, he's in Delhi to play in Vijay Hazare trophy

தகவல் அறிந்ததும், ஹோட்டல் ஊழியர்கள் கிரிக்கெட் வீரர்களை அவசரமாக வெளியேற்றினர். இதனால் டோணி உள்ளிட்ட வீரர்கள் காயமின்றி தப்பினர். ஜார்கண்ட் வீரர்களின் கிரிக்கெட் கிட் சில சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire breaks out in Dwarka, semifinal between Bengal, Jharkhand postponed. Dhoni was in the hotel along with the team when fire broke out.
Please Wait while comments are loading...