நெருங்கும் தீபாவளி... ஒரு மாதம் பட்டாசு வெடிக்கத் தடை விதித்த மும்பை போலீஸ்!
மும்பை: அடுத்த ஒரு மாதத்திற்கு, அதாவது நாளை (நவம்பர் 2) முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க மும்பை போலீசார் தடை விதித்துள்ளனர்.
இன்னும் சரியாக 10 தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே பட்டாசுகளும் இன்றியமையாதது. பட்டாசு வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்நிலையில் மும்பை போலீசார் பட்டாசு வெடிக்க மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடியிருப்புகளுக்கு மேலே....
யாரும் பட்டாசுகளை தீயில் இட்டு எரித்து விளையாடக்கூடாது. 20 அடிக்கு மேல் நீளமான சர வெடிகளை வெடிக்க கூடாது. ராக்கெட், தீ பலூன்களை குடியிருப்புகளுக்கு மேல் பறக்க விடக்கூடாது.

சைலண்ட் சோன்...
மேலும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சைலன்ட் சோன் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது. 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. 105 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிக்க கூடாது.

தடை...
இதேபோல் நாளை (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடாது.

நடவடிக்கை...
போலீசாரின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications