For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைட் 11 மணிக்கு நடந்த நிலச்சரிவு...எங்களால் எதுவும் செய்ய முடியலையே - கலங்கும் மேகநாதன்

மூணாறில் இரவு 11 மணிக்கு நடந்த நிலச்சரிவு மண்ணில் புதைந்தவர்களை மீட்க மறுநாள்தான் போக முடிந்திருக்கிறது.

Google Oneindia Tamil News

மூணாறு: மொத்தம் 70 பேர் அப்படியே மண்ணுக்குள்ள போயிட்டாங்க 4 பேரை மட்டும்தான் அப்ப எங்கனால காப்பாத்த முடிஞ்சது என்று மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்டத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் மேகநாதன் கூறினார். விபத்து நடந்த உடன் யாருக்குமே தகவல் தெரிவிக்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருந்தது. மின்சாரம், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. உயிரை பணயம் வைத்து மீட்பு படையினருக்கு தகவல் சொல்லி வரவழைத்திருக்கிறார்.

மூணாறு கடவுளின் தேசமான கேரளாவில் தேயிலை எஸ்டேட் அதிகம் காணப்படும் அழகான இடம். இங்கு நிலவும் ரம்மியமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க பலரும் சுற்றுலா செல்வார்கள். இங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலைதான் கவலைக்கிடமானது. ஆண்டுதோறும் மழை, வெள்ளம் இயற்கை சீற்றங்களில் சிக்கி அல்லல்படுகின்றனர்.

Munnar tragedy I went to the estate office and urged the field officer says Meghanathan

வியாழக்கிழமையன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மண்ணோடு புதைந்து விட்டனர். இவர்களில் 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரோடு மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் நிகழ்ந்த விபத்து வெளி உலகத்திற்கு தெரிய வந்தது எப்படி? யார் தகவல் சொல்லியிருப்பார்கள் என்ற கேள்வி வந்த போது, மழை வெள்ளம் அதிகம் வருவதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டே பேசுகிறார் மேகநாதன். ராத்திரி சாப்பிட்டு நான் வாட்சரை பார்க்கப் போனேன். 11 மணியிருக்கும் தண்ணீ ரொம்ப வேகமா வந்தது. எல்லாமே மண்ணோட மண்ணா போயிருச்சு.

மொத்தம் 30 வீடு அதுல 22 குடும்பம் இருந்தாங்க. இதுல 2 குடும்பம் தப்பிச்சிட்டாங்க. 8 பேர் அவங்களா வந்தாங்க. 4 பேரை நாங்க காப்பாத்துனோம். மத்தவங்க புதைஞ்சு போயிருக்கலாம் ஆத்து வெள்ளத்திலுயும் அடிச்சிட்டு போயிருக்கலாம். எல்லாமே வனப்பகுதி யாரு எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியாது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

நைட் மழை வெள்ளத்திலேயும் நடந்தே போய் தகவல் சொன்னேன். மழை ஜாஸ்தியா இருந்ததுனாலே காலையிலதான் வர முடிஞ்சது. 8 மணிநேரம் பலர் உயிரோட போராடிட்டு இருந்தாங்க என்று கூறியுள்ளார் எஸ்டேட் சூப்பர்வைசர் மேகநாதன்.

Recommended Video

    Idukki Landslide: உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்

    English summary
    Heavy rain lashed the area around that worsened the situation. I went to the estate office and urged the field officer to send somebody to help. We gathered some workers and were able to save two families,” said Meghanathan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X