கார்பா பந்தலுக்குள் நுழைய முஸ்லிம்கள் கோமியத்தை குடிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.
போபால்: முஸ்லிம்கள் கார்பா ஆட்டம் நடக்கும் இடத்திற்குள் நுழைய கோமியத்தை குடிக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ்வர் சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹுசுர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ்வர் சர்மா. அவர் நவராத்திரியையொட்டி நடத்தப்படும் கார்பா நடன நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் முஸ்லிம்கள் நுழைய வேண்டுமானால் அவர்கள் கோமியத்தை குடிக்க வேண்டும் அல்லது பசும் பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பஞ்ச்கவ்யாவை உண்ண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்து பெண்களுடன் தான் வர வேண்டும். அவ்வாறு வந்தால் தான் அவர்கள் இந்து பெண்களை பார்க்க மாட்டார்கள் என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.
கார்பா நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடலுடன் துவங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வர விரும்பும் முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று சர்மா மேலும் தெரிவித்துள்ளார். சர்மாவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முன்னதாக மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. உஷா தாகூர் கூறுகையில்,
இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஆடவும், பாடவும் மட்டும் கார்பா பந்தலுக்கு வருவதை அனுமதிக்க முடியாது. பந்தலுக்குள் இந்து வாலிபர்களை மட்டும் அதுவும் அவர்களின் அடையாள அட்டையை பார்த்த பிறகு அனுமதிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications