முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம்.. டெல்லி போலீசாரிடம் தந்தை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை ஜீவானந்தம் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திங்கள்கிழமை டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றுள்ளார்.

Muthu Krishnan's father police Complaints to the Delhi Police

பின்னர் மர்மமான முறையில் அந்த வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை ஜீவானந்தம் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஜே.என்.யூ. பல்கலை மாணவர்களுடன் சென்று வசந்த விஹார் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் மன அழுத்தத்தில் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவதில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜீவானந்தம் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
JNU student Muthu Krishnan's father police Complaints to the Delhi Police
Please Wait while comments are loading...