என்னுடைய நாடு வேற லெவலில் இருக்கும்.. தனி நாடு உருவாக்கிய தில் தீட்சித் சொல்வதை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்.. வீடியோ

  டெல்லி: இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

  இந்த நிலையில் பிர் தாவில் பகுதிக்கு தன்னை ராஜாவாக அறிவித்துக் கொண்டிருக்கும் சுயாஷ் தீட்சித் தன்னுடைய கனவு நாடு குறித்து எழுதி இருக்கிறார்.

  தன்னுடைய நாடு எப்படி எல்லாம் இருக்கும் என வித்தியாசமாக பேசி எழுதி உள்ளார். மேலும் அவர் தனது நாட்டில் இருக்கும் வளங்கள் குறித்தும் எழுதி இருக்கிறார்.

   யாருமற்ற தி கிங்கிடம் ஆப் தீட்சித்

  யாருமற்ற தி கிங்கிடம் ஆப் தீட்சித்

  எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் 'பிர் தாவில்' என்ற பகுதி இருக்கிறது. மனிதர்கள் அற்ற இந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கோரியதும் இல்லை. தற்போது இந்த பகுதியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் ராஜாவாக அறிவித்து உள்ளார். அந்த நாட்டிற்கு ''தி கிங்டம் ஆப் தீட்சித்'' பெயரிட்டு புதிய கொடி ஒன்றையும் வடிவமைத்து இருக்கிறார்.

   யாருமற்ற பூமி

  யாருமற்ற பூமி

  இந்த நாடு பார்ப்பதற்கு பாலைவனம் போல இருந்தாலும் விவசாயம் செய்தால் வளமாக மாறும் வல்லமை கொண்ட நாடு என கூறப்படுகிறது. உலகிலேயே இந்த ஒரு நாட்டிற்கு மட்டும்தான் விக்கிபீடியா '0' மக்கள் தொகை என்ற அந்தஸ்தை கொடுத்து இருக்கிறது. இனி அந்த நாட்டில் குடியேற போகும் நபரான தீட்சித் தான் அந்த நாட்டின் முதல் குடிமகனாக இருப்பார். மேலும் இந்த நாடு 2061 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

  தீட்சித் நாடு எப்படி பட்டது

  தீட்சித் தனது நாடு எப்படி இருக்கும் என விலாவரியாக கூறியிருக்கிறார். அவர் தனது பேஸ்புக் போஸ்டில் ''என்னுடைய நாட்டில் வறுமையும் மோசமான சட்டமும் இருக்காது. மக்கள் பெரிய அளவில் சுதந்திரத்தோடு இருக்கலாம். முக்கியமாக என்னுடைய நாடுதான் உலகிலேயே அதிக அறிவு பொருந்திய நாடாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

   தண்ணீர் கிடைக்குமா

  தண்ணீர் கிடைக்குமா

  இந்த பகுதிக்கு நீர் ஆதாரம் என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. இரவில் திடீர் என்று பாலைவன மழை போல சமயங்களில் பெய்யும். ஆனால் இங்கு செடி நடும் பட்சத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கிருந்து செங்கடல் சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. தீட்சித் செடி விதையை அங்கு நட்டு இருக்கிறார். அதன் வளர்ச்சியில் இருந்து இந்த பூமியின் வளம் தெரியும்.

   ஆரம்பிக்கிறத்துக்குள்ள எண்டு கார்ட்

  ஆரம்பிக்கிறத்துக்குள்ள எண்டு கார்ட்

  இந்த நாட்டில் பெரிய பிரச்சனையாக இருக்க போவது தீவிரவாத தாக்குதல் மட்டுமே. யாரும் கவனிக்காமல் இருந்த நாடு இப்போது தீட்சித் மூலமாக வைரல் ஆகி இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து 90 கிமீ தூரத்தில் இருக்கும் சூடானில் தான் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த புதிய நாடு உருவானால் பெரிய அளவில் பாதுகாப்பாக இருக்காது.

   ஓவர் நைட்டில் ஒபாமா

  ஓவர் நைட்டில் ஒபாமா

  இவர் தன்னை ஒரு நாட்டின் அரசராக அறிவித்த அடுத்த நொடியில் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார். உலகில் நிறைய பேர் இவரை பேட்டி எடுக்க வரிசை கட்டி கத்துக்க கொண்டு இருக்கின்றனர். அந்த பகுதியை எப்படி கண்டுபிடித்தார் என மொத்த உலகமும் அவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாளில் அவர் அந்த நாட்டில் குடியேற இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

   கமெண்ட் பாக்ஸ் கதறியது

  கமெண்ட் பாக்ஸ் கதறியது

  இவர் தனது பேஸ்புக் போஸ்ட் போட்டதில் இருந்து நெட்டிசன்கள் கமெண்ட்களால் கதறடித்து வருகின்றனர். நிறைய பேர் இப்போதே எனக்கு ஒரு பிளாட் ஒதுக்குங்க என்று கேட்டு உள்ளனர். சில 'சீ வியூ' அப்பார்ட்மெண்ட் கேட்டு உள்ளனர்.இன்னும் சிலர் காமெடியாக 'ஒருவேளை இதுதான் புதிய இந்தியாவோ' என்றும் கேட்டுள்ளனர். ராஜாவின் மனைவி ஆகி ராணியாக மாறும் பொருட்டு பலர் இவருக்கு கமெண்டில் காதல் விண்ணப்பமும் அளித்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indian named Suyash Dixit declares himself as a king of unclaimed no man's land. He is also encouraging interested people to apply for citizenship. My country will be a unique one says new king Suyash Dixit.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற