For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடாக சுற்றுலாவை விளம்பரப்படுத்த 13,000 அடியில் ஸ்கைடைவிங் செய்த பாஜக எம்.பி.

By Siva
Google Oneindia Tamil News

மைசூர்: சுற்றுலாவை விளம்பரப்படுத்த மைசூர் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கைடைவிங் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாவை விளம்பரப்படுத்த நினைத்தார் மைசூர் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா. இதையடுத்து அவர் திங்கட்கிழமை மைசூர் விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கைடைவிங் செய்துள்ளார்.

Mysore MP Pratap Simha skydives to promote state tourism

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஸ்கைடைவிங் செய்ய 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா விமானத்தில் ஏறி உயரத்திற்கு சென்ற பிறகு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் விமானத்தில் இருந்து குதித்து காற்றில் மிதந்தபோது அருமையாக இருந்தது. ஸ்கைடைவிங் த்ரில்லாக இருந்தது.

புதுமையை விரும்புவோரின் மனதில் நம்பிக்கையை வரவழைக்க நான் ஸ்கைடைவிங் செய்தேன். ஸ்கைடைவிங் பாதுகாப்பானது. தங்களின் வாழ்க்கையில் ஒரு முறையாவது அனைவரும் ஸ்கைடைவிங் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மைசூர் விமான நிலையத்தில் ஸ்கைடைவிங் என்று கூறி தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்ஹா.

English summary
BJP MP Pratap Simha did skydiving at Mysore airport on monday to promote tourism in Mysore and Kodagu districts in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X