60 குழந்தைகள் மரணம்.... கோரக்பூர் அரசு மருத்துவமனை அவலம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ : கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து நீதி விசாரணை நடத்த உ.பி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோரக்பூரில் உத்தரபிரதேச அரசால் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நோய் தொற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் இறந்ததாக தெரிகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட இந்தக் கல்லூரி மருத்துவமனையை உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக பத்து படுக்கை கொண்ட ஐசியூ, ஆறு கெட் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு மையங்களை தொடங்கி வைத்துவிட்டு குழந்தைகள் வார்டையும் பார்வையிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அப்போது குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பகுதியில் செயற்கை ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது எப்படி கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.

5 நாளில் 60 குழந்தைகள் இறப்பு

5 நாளில் 60 குழந்தைகள் இறப்பு

இந்நிலையில் நேற்று பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி வெளியிட்டுள்ள தகவலில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் குழந்தைகள் பிரிவில் இருந்த 60 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி 9 குழந்தைகள், ஆகஸ்ட் 8ஆம் தேதி 12 குழந்தைகள், 9ஆம் தேதி 9 குழந்தைகள், 10ஆம் தேதி 23 குழந்தைகள் மற்றும் நேற்று 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.

மருத்துவமனை மறுப்பு

மருத்துவமனை மறுப்பு

ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்வது உண்மையல்ல என்று மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்பட்டாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையில்லை

ஆக்சிஜன் பற்றாக்குறையில்லை

இது குறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ராடெலா கூறும் போது "பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த குழந்தைகயும் இறக்கவில்லை. ஆகஸ்ட் 11ஆம் தேதி 9 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளன அவையும் வெவ்வேறு மருத்துவ காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாக" அவர் கூறியுள்ளார்.

விசாரணை நடத்தப்படும்

விசாரணை நடத்தப்படும்

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் தீர விசாரிக்கப்பட வேண்டியது. எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் இறப்பிற்கான முழு காரணம் தெரிய வரும் என்றும் ராஜீவ் கூறியுள்ளார்.

சோனியா வலியுறுத்தல்

சோனியா வலியுறுத்தல்

அப்பாவிக் குழந்தைகள் 60 பேர் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார், குழந்தைகளுக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டது தண்டனைக்கு உரியது என்றும் இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தீர்க்கமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 60 children have died over five days at the state-run Baba Raghav Das Medical College hospital in Gorakhpur, prompting the Uttar Pradesh government to order a magisterial inquiry into the incident.
Please Wait while comments are loading...