நமோ என்றால் வெறும் வெட்டிப் பேச்சு பேசுபவர் என அர்த்தம்: ராகுல் காந்தி பொளேர்
கோழிக்கோடு: நமோ என்றால் ஒன்றும் செய்யாமல் வெறும் பேச்சு மட்டும் பேசுபவர் என்று அர்த்தம் என பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கோழிக்கோட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,

சூட்
நாட்டில் எந்த பிரதமரும் அணியாத அளவுக்கு மோடி ரூ.10 லட்சத்திற்கு சூட் அணிந்தார். அவர் பாமர மக்களை கண்டுகொள்ளாமல் ஃபேஷனில் மூழ்கியுள்ளார். சூட் பூட் சர்காருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வெட்டிப் பேச்சு
மோடியை நமோ என்று அழைக்கிறார்கள். நமோ என்றால் ஒன்றும் செய்யாமல் வெறும் பேச்சு மட்டும் பேசுபவர் என அர்த்தம். மோடி நன்றாக பேசுவதில், ஆடை அணிவதில் தான் ஆர்வமாக உள்ளார்.

நில மசோதா
நிலம் கையப்படுத்தும் மசோதாவை ராஜ்யசபாவில் ஒருபோதும் நிறைவேற்ற விட மாட்டோம். சூறாவளி மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவாமல் வேலைவாய்ப்பை உருவாக்குகிறேன் என்ற பெயரில் அவர்களின் நிலத்தை பறிக்கப் பார்க்கிறார் மோடி.

வெளிநாடு
மோடிக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்றால் மிகவும் பிடித்துள்ளது. ஆனால் அவர் ஒருமுறை கூட வறுமையில் வாடி இறந்த விவசாயிகளின் வீடுகளுக்கு வந்தது இல்லை.

மீனவர்கள்
விவசாயிகளை அடுத்து மீனவர்களை குறி வைக்கிறது மத்திய அரசு. இது மிகவும் மோசமானது. மீனவர்களை மத்திய அரசு குறிவைக்க ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications