நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்கு மோடி, டிரம்ப், ஒபாமா கண்டனம்
டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்தவர் பொதுமக்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் நகர போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு தீவிரவாத தாக்குதல் என அழைக்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நியூயார்க்கில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம். தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும், காயமடைந்தோருக்கும் எனது அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Strongly condemn the terror attack in New York City. My thoughts are with the families of the deceased & prayers with those injured.
— Narendra Modi (@narendramodi) November 1, 2017
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், "பாதிக்கப்பட்டோருக்கு எனது அனுதாபங்கள். கடவுளும், இந்த நாடும் உங்களுடனே இருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மற்றொரு டிவிட்டில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
My thoughts, condolences and prayers to the victims and families of the New York City terrorist attack. God and your country are with you!
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2017
இதேபோல அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மிட்சேலும், தானும் இந்த தாக்குதலில் பலியானோர் குறித்தே நினைத்துக்கொண்டு இருப்பதாக உருக்கமாக அவர் கூறியுள்ளார்.
Michelle and I are thinking of the victims of today's attack in NYC and everyone who keeps us safe. New Yorkers are as tough as they come.
— Barack Obama (@BarackObama) November 1, 2017












Click it and Unblock the Notifications