For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் ஏர்போர்ட்டில் ரன்வே விளக்குகளில் மோதிய இன்டிகோ விமானம்: பயணிகள் தப்பினர்

By Siva
Google Oneindia Tamil News

Narrow escape for Indigo passengers as plane veers off runway in Bangalore
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து கொஞ்சம் விலகிச் சென்று அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 110 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் நேற்று இரவு 8.10 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கன மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி அங்கிருந்த விளக்குகள் மீது மோதியது. இதில் 3 விளக்குகள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து விமான சேவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம் வாகனங்கள் மூலம் ஓடுதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இந்நிலையில் விமான சேவை நிறுத்தப்பட்டதால் பெங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இது தவிர பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய 9 விமானங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றன.

டெல்லி, கொல்கத்தா, கோவை, கொச்சி மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 16 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. பின்னர் நேற்று இரவு 11.45 மணிக்கு 16ல் 4 விமானங்கள் சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டன என்று சென்னை விமான நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

English summary
As air operations were suspended for two hours in the Bangalore International airport after an Indigo airlines flight veered off the runway while landing, hitting the edge lights, 16 flights were diverted to Chennai airport last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X