"போர் வெடித்தால்.. நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிற்க வேண்டும்!" பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அண்டை நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இந்தியா நிற்கும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில்களை சேர்ந்த பாஜக தலைவர்கள் சில நேரங்களில் கூறும் கருத்துகள் மிக பெரிய சர்ச்சையாக வெடித்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் மீண்டும் இப்போது நடந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பொருள்பட ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.

BJP India pakistan

பாகிஸ்தான் உடன் நிற்க வேண்டும்

நேற்று வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இந்த விஷயத்தை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் நமது அண்டை நாடு என்பதால் நாம் அதனுடன் தன் நிற்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நமக்குள் ஒரு பிரச்சினை ஏற்படும்போது, நாம் இந்தியாவின் பக்கம் நிற்போம். சரிதானே? நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்" என்று தெரிவித்தார்.

மதன் ரத்தோரின் கருத்து அங்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தைு தேசவிரோதமானது என்று விமர்சித்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது, ராஜஸ்தான் பாஜக தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் பாய்ச்சல்

இது குறித்து அவர் கூறுகையில், "நமது வீரர்களையும் மக்களையும் கொல்லும் பயங்கரவாத நாடான பாகிஸ்தான் மீது பாஜக கொண்டுள்ள பாசம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், தான் பாகிஸ்தானுடன் இருப்பதாக ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகிறார். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையென்றால், தேசவிரோதமான இந்த கருத்தைக் கூறியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆம் ஆத்மி

மதன் ரத்தோரின் பேச்சு அடங்கிய வீடியோவை பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் இதை கடுமையாக சாடியுள்ளனர். பாஜகவுகும் பாகிஸ்தானுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்த பின்னணி இருப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினார். அவர் மேலும், "இனிமேல் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் பாகிஸ்தானுடன் இருப்போம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் ரத்தோர் கூறுகிறார். உண்மையில் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்த பின்னணி உள்ளது" என்று சாடியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் இந்தியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் என்று மதன் ரத்தோர் கூறியதைச் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+