For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்... உள்ளாடை விவகாரம்- மாநில மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் கொந்தளிப்பு

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர் அகற்ற சொன்னது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரளா மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர் அகற்ற சொன்ன சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தும்படி மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிறன்ற நடைபெற்றது.

நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழக மாணவர்களிடமும் கடும் கெடுபிடி காட்டப்பட்டது.

வெட்டப்பட்ட சட்டை

வெட்டப்பட்ட சட்டை

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கத்தரிக்கோலால் மாணவர்களின் சட்டையை வெட்டி, அரைக்கை சட்டையாக்கிய பின்னரே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தலைவிரி கோலம்

தலைவிரி கோலம்

இதேபோல் மாணவிகள் சிலர் தலை முடிக்கு கிளிப் மாட்டி வந்ததால், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் அந்த கிளிப்பை அகற்றினர். இதனால் தலைவிரி கோலமாக போய் மாணவிகள் தேர்வு எழுதினர்.

கருப்பு நூலை கழட்டிய ஆபீசருங்க... அதை ஏன் கழட்டச் சொல்லலை? நெட்டிசன்ஸ் கேள்வி!கருப்பு நூலை கழட்டிய ஆபீசருங்க... அதை ஏன் கழட்டச் சொல்லலை? நெட்டிசன்ஸ் கேள்வி!

கேரளாவில் வரம்பு மீறல்

கேரளாவில் வரம்பு மீறல்

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் விதிமுறைகள் என்ற பெயரில் வரம்பு மீறல் சம்பவம் நடந்து உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 19வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தார். அப்போது அங்கிருந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனை செய்தார்.

உள்ளாடை அகற்றம்

உள்ளாடை அகற்றம்

மெட்டல் டிடெக்டரை, மாணவியின் மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்ற போது அதில் பீப் சத்தம் கேட்டது. இதனால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்றும்படி கூறினார். அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்பு கொக்கி இருப்பதால்தான் சத்தம் கேட்பதாக விளக்கம் அளித்து உள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றி தனது உள்ளாடையை கழற்றி அவரது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார்.

வலுக்கும் எதிர்ப்பு

வலுக்கும் எதிர்ப்பு

தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக முறையாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கண்ணூர் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சிவா விக்ரம் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

மாநில மனித உரிமை ஆணையம்

மாநில மனித உரிமை ஆணையம்

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நேற்று வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மோசமான மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ள ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் தெரி வித்துள்ளது.

கேரளா மகளிர் ஆணையம்

கேரளா மகளிர் ஆணையம்

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மகளிர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் கேரள சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் உறுதி அளித்தார்

English summary
The Kerala Women's Commission has ordered a probe, Kannur District Police Chief G Siva Vikaram said a case would be registered if the parents or the girl filed a complaint.So far we have not received any complaint. The Special Branch has been asked to look into the incident he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X