For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து அரசின் போர்க் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி பெயர் இல்லை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயர் இங்கிலாந்து அரசின் போர்க்குற்றவாளிகள் பட்டியலில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 கோப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அதில் 1945ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Netaji's name was not in UK's war criminals list

அந்த கடிதத்தில் நேரு கூறியிருப்பதாவது,

டியர் மிஸ்டர் அட்லீ,

உங்களின் போர்க் குற்றவாளி சுபாஷ் சந்திர போஸ் ரஷ்ய எல்லைக்குள் நுழைய ஸ்டாலின் அனுமதித்துள்ளார் என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது. அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுப்படையில் இருக்கும் ரஷ்யா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. இதை மனதில் வைத்து எது சரியானாதோ அதை செய்யுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் உண்மையான ஜவஹர்லால் நேரு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கடிதத்தை நேருவோ அவரது உதவியாளரோ எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு வெளியிடப்பட்ட போர்க் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜியின் பெயர் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த போர்க் குற்றவாளிகள் பட்டியலில் ஜப்பான் மற்றும் ஜெரிமனியைச் சேர்ந்தவர்களின் பெயர் தான் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the Indian high commission in UK, Netaji's name was not in the war criminals list released by UK at the end of second world war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X