For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு: இறந்தும் சரித்திரம் படைத்த கருணாநிதி

கருணாநிதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்துள்ளது.முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By Rajeswari
Google Oneindia Tamil News

டெல்லி: கருணாநிதிக்கு மிகப்பெரிய பெருமை, வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

New History Created by Karunanidhi!

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி அறிவித்தார். கருணாநிதி நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒரு நாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முன்னதாக, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அது மட்டுமில்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப்
பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கருணாநிதி மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கருணாநிதி மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நாள்முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

English summary
Both houses of the parliament has been adjourned for the day as away to pay tribute to DMK supremo Karunanidhi who was never a member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X