For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினர் இழிவாக நடத்தப்படுகின்றனரா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: புதிரை வண்ணார் சமூகத்தினர் இழிவாக நடத்தப்படுகின்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் பிணங்களின் ஆடைகள், பருவம் எய்திய பெண்களின் ஆடைகள், பிரசவம் முடிந்ததும் தாயின் ஆடைகள் ஆகியவற்றைத் துவைக்க வேண்டும் என சிலர் கட்டாயப்படுத்துகின்றனர்.

இந்த வேலைகளை அச்சமுதாயத்தினர் செய்ய மறுத்தால் அவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த புகாரை விசாரணைக்கு அனுமதித்த ஆணையம் இது குறித்து விசாரித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

English summary
The National Human Rights Commission has issued a notice to Tamil Nadu Government over allegations of human rights violation of Puthirai Vannar community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X