தேர்தல் முடிவு 
மத்தியப் பிரதேசம் - 230
PartyLW
CONG1112
BJP1009
IND30
OTH50
ராஜஸ்தான் - 199
PartyLW
CONG4552
BJP4827
IND94
OTH77
சட்டிஸ்கர் - 90
PartyLW
CONG4324
BJP123
BSP+71
OTH00
தெலுங்கானா - 119
PartyLW
TRS285
TDP, CONG+120
AIMIM07
OTH13
மிஸோரம் - 40
PartyLW
MNF026
IND08
CONG05
OTH01
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  விழா மேடையில் மயங்கி விழுந்த கட்கரி.. லோசுகர் காரணமாக மயங்கியதாக டிவீட்

  |

  அகமதுநகர் : மகாராஷ்டிராவில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ராகுரி என்ற இடத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

  nihtin gadkari faints on stage in maharastra, later tweets he is doing well

  விழாவின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட அனைவரும் எழுந்து நின்றனர். மத்திய அமைச்சரான நிதின் கட்கரியும் எழுந்து நின்றார். அப்போது யாரும் எதிர்பாராத தருணத்தில் அவர் விழா மேடையிலேயே மயங்கி சரிந்தார்.

  அருகில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனே தாங்கிப் பிடித்தார். மருத்துவர்கள் குழுவும் உடனடியாக விரைந்தது. சுற்றியிருந்தவர்கள் கண நேரத்தில் அதிர்ச்சியில் உறைய, மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கட்கரி தற்போது நலமாக உள்ளார்.
  விழா மேடையிலேயே மத்திய அமைச்சர் மயங்கி சரிந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இது குறித்து தகவல் அறிந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், உள்ளிட்ட பலரும் கட்கரியின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்துள்ளனர். மிக விரைவில் மீண்டு, உடல்நலம் தேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமது டுவிட்டர் பக்கத்தில் கட்கரியின் உடல்நலம் விசாரித்துள்ளார்.தமது பிரார்த்தனை என்றும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

  இது குறித்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கட்கரி, உடலின் சர்க்கரை அளவு குறைந்ததால் உடல் நலம் பாதித்ததாக கூறியுள்ளார். தமது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Union minister Nitin Gadkari reportedly fainted due to low blood sugar during a event in Maharashtra on Friday. Maharashtra Governor Ch Vidyasagar Rao, who was present there helped him get up. Mr Gadkari was then examined by doctors. Mr Gadkari also took to his twitter account and informed that he was better.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more