• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராணுவ மேஜர் மனைவியை கொன்ற கையோடு வேறொரு பெண்ணை டேட்டிங் அழைத்த நிகில்.. விசாரணையில் திடுக் தகவல்!

By Kalai Mathi
|
    ராணுவ மேஜர் மனைவியை கொன்று வேறொரு பெண்ணுடன் டேட்டிங்- வீடியோ

    டெல்லி: ராணுவ மேஜரின் மனைவியை கொன்ற கையோடு மற்றொரு பெண்ணை ராணுவ அதிகாரி டேட்டிங் அழைத்த தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் இராணுவ மேஜர் அமித் திவிவேதி. இவரின் மனைவியான சைலஜா கடந்த சனிக்கிழமை டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு இராணுவ மேஜரான நிகில் ஹண்டாவை கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருந்த போது ஹண்டாவை சுற்றி வளைத்து கைது செய்தனர் போலீஸ்.

    அடுத்தவர் மனைவி மீது காதல்

    அடுத்தவர் மனைவி மீது காதல்

    கடந்த 2015-ஆம் ஆண்டு சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்தபோது அவரது குடும்பத்துடன் நிகில் ஹண்டாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.அப்போது அமித்தின் மனைவி சைலஜாவை கண்ட நிகில், அவர் மீது காதல் கொண்டுள்ளார்.

    திருமணம் செய்ய தொல்லை

    திருமணம் செய்ய தொல்லை

    இந்நிலையில் அமித் பணிமாறுதல் காரணமாக டெல்லிக்கு வரவே சைலாஜாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் நிகில். கடந்த வாரம் டெல்லி வந்த நிகில், சைலஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

    3 முறை காரை ஏற்றி கொலை

    3 முறை காரை ஏற்றி கொலை

    இதற்கு சைலஜா மறுக்கவே அவரது கழுத்தை அறுத்ததோடு ஓடும் காரில் இருந்து கீழே தள்ளி மூன்று முறை அவர் மீது காரை ஏற்றி மிக கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் சைலஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

    சிதைந்த முகம்

    சிதைந்த முகம்

    அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்தது. டெல்லியை உலுக்கிற இந்த கொலை தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    35000 கால்ஸ்

    35000 கால்ஸ்

    சைலஜாவை கொலை செய்த இராணுவ மேஜர் நிகில் ஹண்டா கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3,500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவருக்கு 1500 எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.

    பெண்களுடன் தொடர்பு

    பெண்களுடன் தொடர்பு

    நிகிலுக்கு பல்வேறு போலியான பெயரில் முகநூல் கணக்குகள் இருந்துள்ளன. அவர் பெண்களை ஈர்க்கும் வகையில் போலியான புரொபைல்களுடன் டேட்டிங் பக்கங்களிலும் தொடர்பில் இருந்துள்ளார்.

    டேட்டிங் அழைத்த நிகில்

    டேட்டிங் அழைத்த நிகில்

    ராணுவ மேஜர் மனைவி சைலஜா கொலைக்கு பின் நிகில் இந்த பக்கங்களில் பெண் ஒருவருடன் டேட்டிங்குக்காக தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    நம்ப முடியவில்லை

    நம்ப முடியவில்லை

    அப்போது தனது கசப்பான திருமண வாழ்வில் இருந்து வெளிவரவே நிகிலுடன் நெருங்கி பழகியதாக தெரிவித்த அந்த பெண், நிகில் கொலை செய்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

    போலீசார் அதிர்ச்சி

    போலீசார் அதிர்ச்சி

    ராணுவ மேஜரின் மனைவியை கொடூரமாக கொலை செய்த கையோடு எந்தவொரு சலனமும் இல்லாமல் அசால்ட்டாக வேறொரு பெண்ணை நிகில் ஹண்டா டேட்டிங் அழைத்த சம்பவத்தை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    மேலும் டெல்லி செய்திகள்View All

     
     
     
    English summary
    Nikil Handa a Military Major after killing Sailaja called another woman for dating. This information has been out in the police inquire.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more