For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவும் நோயாகும். இந்த வைரஸ் தாக்கிய வௌவால்கள் எதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள் சாப்பிட்டு இருந்தால், இந்த வைரஸ் தாக்கும். இது வேறு எப்படியெல்லாம் பரவுகிறது என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Nipah Virus: Death toll touches 16

இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள்அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது சாதாரண நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேரும் எல்லோருக்கும், இந்த நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூளையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

சரியாக 18 நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒருவர் இந்த வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் வரிசையாக நிறைய பேர் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்ட்டனர். இதுவரை இந்த நோய் காரணமாக 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்படைந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

English summary
Nipah Virus in Kerala spreads in a high speed. Death toll reaches to 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X