For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதவி பறிபோகும் பயத்தில் பாஜக முதல்வர்கள்...நிதின் கட்கரியின் சுவாரஸ்ய பேச்சு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: கடந்த 6 மாதங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த 5 முதல் அமைச்சர்களை மாற்றியுள்ளது பாஜக. இதில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி.

திடீர் பரபரப்பு.. 1-10 வயது குழந்தைகளை பாதிக்கும் கொரோனா... வார்னிங் தந்த நிபுணர்கள் திடீர் பரபரப்பு.. 1-10 வயது குழந்தைகளை பாதிக்கும் கொரோனா... வார்னிங் தந்த நிபுணர்கள்

கர்நாடகாவில் மூத்த தலைவராக இருந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து விலக செய்த பாஜக தலைமை, பசவராஜ் பொம்மையை புதிய முதல்வர் ஆக்கியது.

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். இப்படித்தான், மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆக்கப்பட்டார்.

பாஜக பிஸி

மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி தொடர்ந்து பாஜக தன்னை அதிகார மாற்றங்களில் பிஸியாக வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள், அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய துறைகள் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். உரிய துறைகள் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களால் முதலமைச்சராக முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள். முதலமைச்சராக இருப்பவர்கள் தங்கள் பதவியை எப்போது பறிபோகும் என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கி ஓடுவது கிடையாது. நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் கடைசி நிலையில் இருப்பவருக்கும் உதவிகள் சென்று சேர வழி ஏற்படுத்திக் கொடுப்பது தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

 பாஜகவில் பரபரப்பு

பாஜகவில் பரபரப்பு

நேர்மறையான பொருளில் நிதின்கட்கரி பேசினாலும் கூட, பாஜகவில் உள்ள பலரும் அதிருப்தியில் இருப்பதாக நிதின் கட்கரி கூறியதாக இந்த பேச்சு மற்றொரு கண்ணோட்டத்திலும் பார்க்கப்படுகிறது. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 குஜராத் அரசியல்

குஜராத் அரசியல்

கடந்த சனிக்கிழமை, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறினார். இந்தப் பதவியில் ஐந்து வருடங்களை நிறைவு செய்த ரூபானி குஜராத் பொதுத் தேர்தலுக்கு 15 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேலின் நெருங்கிய ஆதரவாளர் பூபேந்திர படேல் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

 அடிக்கடி மாற்றங்கள்

அடிக்கடி மாற்றங்கள்

2017 ல் நடைபெற்ற குஜராத் தேர்தலை முன்னிட்டு, 2016 ல் ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியிடத்திற்கு ரூபானி வந்தார். இப்போது அடுத்த தேர்தலுக்கு முன்பாக ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக ஒரு புதிய முகத்தை மக்களிடம் காண்பித்து ஓட்டு கேட்கும் யுக்தியை பாஜக கையில் எடுத்து இது போல செயல்படுவதாக பரவலாக கூறப்படுகிறது.

English summary
Union Minister Nitin Gadkari made the remarks while addressing a seminar in Rajasthan. In it, MLAs are upset that they did not get the ministerial post, while those who got the ministerial post are saddened that they did not get the departments they deserved. Those who have made the relevant departments available are saddened that they have not been able to become the Chief Minister. Those who are chief ministers are worried about when they will lose their posts. But politics is not about running for power. Our goal should be to use our power to help those at the bottom of the community to go and help. Thus said Nitin Gadkari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X