மும்பையில் பந்த் தீவிரம்.. டப்பாவாலாக்கள் பணி பாதிப்பு.. ஆபீஸ் போனவர்கள் சாப்பாட்டுக்கு தவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ

  மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள், பிராமண பேஷ்வா படையை தோற்கடித்தனர்.

  அந்த போரின் 200வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித் மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியுள்ளது.

  ஓர் இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. மும்பையில் நேற்று ரயில் சேவை 3 மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது. இன்று மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெறுகிறது.

  டப்பாவாலாக்கள் பணி

  டப்பாவாலாக்கள் பணி

  இதனால் மும்பையிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அலுவலகம் செல்வோர் பெரிதும் நம்பியிருப்பது டப்பாவாலாக்களைத்தான். வீடுகளில் இருந்து மதியம் சாப்பாட்டை பெற்றுக்கொண்டு ரயில்களில் பயணித்து, அலுவலகங்களில் அந்த சாப்பாட்டு பாக்ஸ்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது டப்பாவாலாக்கள் பணி.

  டப்பா வாலாக்கள் பணி பாதிப்பு

  டப்பா வாலாக்கள் பணி பாதிப்பு

  மும்பையில் நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர மற்றும் உயர் தட்டு மக்களின் உணவு தேவைகளை இவர்களே பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்கள் பணிக்கு செல்லவில்லை.

  சாப்பாடு கொண்டு போக முடியாது

  சாப்பாடு கொண்டு போக முடியாது

  டப்பாவாலாக்கள் சங்கத்தினர், இன்று சப்ளையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். சங்கத்தின் தலைவர் சுபாஷ் தலேகர் கூறுகையில், "பந்த் நேரத்தில் சாப்பாட்டை கொண்டு உரிய நேரத்தில் சேர்ப்பது இயலாத காரியம் என்பதால் இன்று நாங்கள் அதை செய்யவில்லை" என்றார்.

  போலீஸ் குவிப்பு

  போலீஸ் குவிப்பு

  மும்பையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  No dabba services for the Mumbaikars today. Dabbawallas Association decided to stay off the road today. The head of the association, Subhash Talekar says "means of transportation difficult for delivery of tiffins on time during Maharashtra Bandh."

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற