எனக்கு யாரும் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை, அது பொய்: நக்மா
மும்பை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை என்றும், அவ்வாறு வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்றும் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீரட் தொகுதிக்குட்பட்ட ஹாபூரில் நடந்த பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹாபூர் எம்.எல்.ஏ. கஜராஜ் நக்மாவின் முகத்தை தன் முகத்தோடு சேர்த்து வைத்தது பெரும் சர்ச்சையானது. அவர் நக்மாவுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்த வீடியோ பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானது. கஜராஜ் நக்மாவின் முகத்தை இழுப்பதும் அவர் எம்.எல்.ஏ.வின் கையை தட்டிவிட்டு தனது வாகனத்தில் ஏறுவதும் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. இந்நிலையில் இது குறித்து நக்மா கூறுகையில்,

கூட்டம்
அலுவலகம் திறக்க சென்ற இடத்தில் கூட்டமும், இரைச்சலுமாக இருந்தது. அதனால் முக்கிய செய்தி ஒன்றை என்னிடம் தெரிவிக்கவே கஜராஜ் என்னை தன் அருகில் அழைத்தார்.

மாலை
பிரச்சாரத்தை துவங்கும் முன்பு அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவிக்குமாறு எம்.எல்.ஏ. என் காதில் தெரிவித்தார்.

அப்படித் தான்
கஜாரஜ் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் அந்த இரைச்சலில் என்னுடன் அப்படித் தான் பேசியிருக்க முடியும். அவர் என்னை தனது மகள் போன்று நினைப்பவர்.

பொய்
கஜராஜ் எனக்கு முத்தம் கொடுத்ததாக கூறுவது பொய். எப்படித் தான் இந்த பொய்கள் எல்லாம் பரப்பப்படுகின்றனவோ?. நான் ஒரு நடிகை என்பதால் சில பத்திரிக்கைகள் உள்நோக்கத்துடன் அவர் எனக்கு முத்தம் கொடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றார் நக்மா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications